பக்கம்:சிதறல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பெருக்கும் கூட்டம் மிக்கது இந்த நாடு என்ற எண்ணம் தான் தோன்றியது. நிச்சயமாக என்னை இந்தக் குடும்ப எல்லைக்குள் போட முடியாது என்பதை மட்டும் உணர்ந்து வந்தேன். மறுபடியும் அந்தப் பழைய கவிதைதான் நினைவுக்கு வருகிறது. "வழிபட்டால் பெண் தெய்வம் ஆவாள் வெறுத்தால் அவள் பேய் ஆவாள் மதித்தால் அவள் பெண் ஆவாள்." அவர் என்னை மதிக்கிருர் என்ருல் என் உணர்வு களை மதிக்க வேண்டும்; என் அனுபவங்களை மதிக்க வேண்டும், என் சிந்தனைகளை மதிக்கவேண்டும்; என் உறவுகளையும் மதிக்க வேண்டும். அவர் என் நண்பனை வெறுக்கத் தொடங்கினர்; அவன் என் காதலன் என்று தவருக எண்ணினர். என் சொந்தக் கடிதங்களை; பாராட்டுகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் உடலை அவர் அறிந்தான்; என் உள்ளத்தை அவரால் அறிய முடியவில்லை என் அழகை அவர் வியந்தார் ஆல்ை என் அறிவை அவரால் மதிப்பிட முடியவில்லை. இந்த உடல் உறவு தான் அவர் நினைத்தது. எனக்கு உணர்வு இருக்கிறது. அறிவு இருக்கிறது ரசனை இருக்கிறது என்னைச் சுற்றி இந்தப் பரந்த உலகம் இருக்கிறது. இது எனக்குச் சொந்தம். * அவர் ரசனைகளில் உறவுகளில் நான் என்றும் தலையிட்டதில்லை; அவற்றை அறிய முயன்றதும் இல்லை இவர் என் குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்து இருக்கக் கூடாது. அதைப் பார்த்தாலும் கவலை இல்லை. அதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆடவன் ஒருவன் பெண்ணுக்குக் கடிதம் எழுதினலே என்னமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/100&oldid=825413" இலிருந்து மீள்விக்கப்பட்டது