பக்கம்:சிதறல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 எனக்கு ஏன் இவ்வளவு சிந்தனைகள் வந்தன. என் கல்லூரி அனுபவம் தான். பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசி விவாதித்து இருக்கிறேன். சமுதாயச் சிந்தனைகள் என்னிடம் கால் கொண்டு விட்டன. ஒரு பக்கத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்புத் தருவதாகப் பேசுகிருேம். மறுபக்கம் உழைக்காமல் வேதாந்தம் பேசும் விநோதங்களைப் பாராட்டுகிருேம். இந்த எல்லைகளைக் கடந்து மனிதன் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைவுகள் தோன்றும். இவ்வளவும் அந்த சினிமா விசிறியோடு பேசி முடிவு செய்தவை அல்ல; அவன் திரைப்படத்து விமரிசனம் ஒன்றை மட்டும் தான் அறிந்திருக்கிறன், அவனுக்கு நடிகை நடிகர் பற்றிய விமரிசனம்தான் தெரியும். சிறப்பாக கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் பாராட்டிப் பேசுவான். அதாவது திரை உலகம் திருந்தி இருக்கிறது என்பது பொருள். திரைக்காகக் கதை என்ற நிலை மாறிக் கதைக்காகத் திரை என்ற நிலை இடம் பெறு கிறது, புதிய பாத்திரப் படைப்புகள் திரைப் படங்களில் இடம் பெற வேண்டும் என்பது எங்கள் பேச்சில் இடம் பெற்றது. ஒரு முறை பனகல் பார்க் பக்கம் நான் போய்த் திரும்பி வருகிறேன். பாட்டியோடுதான் வீடுதிரும்புகிறேன். சாலை எல்லாம் கார்கள் நின்று கொண்டு இருந்தன். யாரோ ஒரு ஆனந்தர் ஆத்மீக விசாரணை பற்றி பேசிக் கொண் டிருந்தார். இதைக் கேட்க இவ்வளவு கார்களா என்று வியந்தேன். இன்னும் இந்த நாடு அறிவு தெளிவு பெற ஒராயிரம் ஆண்டுகள் ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது. சமுதாயச் சிந்தனை அற்று ஆத்மவிசாரணைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/99&oldid=825637" இலிருந்து மீள்விக்கப்பட்டது