பக்கம்:சிதறல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 உண்பது, உறங்குவது, உடுப்பது, அணிவது இவற்றைத் தவிர வேறு எதுவும் என் வீட்டு வாழ்க்கையில் காண முடியவில்லை. என் அவர் அவர் பழகிய சூழல் விசித்திரமானது. அதாவது தமிழ் இலக்கியம் படித்தவர்கள் பெறும் மன நிலையை அவர் பெற்றிருந்தார். 'கற்பு’ என்பதற்குப் பயங்கரமான பொருளைக் கொண்டவர். 'தூய்மை' என்ற அர்த்தமில்லாத சொல்லிலே அவர் பழகியவ்ர். என்னை மணக்கும் பொழுது அவர் பெரிய மனப் போராட்டம் நடத்தி இருக்கிருர். எதற்காக? தன் பிரம்ம சரியம் கெட்டுவிடுகிறதே என்று. பெண் கூட தன் கற்பு கெடுவதற்குக் கவலைப்படமாட்டாள். அவர் தன் பிரம்மச் சரியம் கெடுகிறதே என்று கவலைப்பட்டவர். அவர் மேல்' தவறு சொல்லிப் பயன் இல்லை. "பிரம்மச்சரியம் காப்பது எப்படி என்பது போன்ற அர்த்தமற்ற நூல்களைப் படித்து மனக் குழப்பம் பெற்றவர். அவர் படித்த கல்வி நிலையம் இராமகிருஷ்ண மடத்தார் நடத்திய நிறுவனம். அங்கே விவேகானந்தர், இராம கிருஷ்ணர், சாரதாமணி இந்தமாதிரிப் படங்களைப் பார்த்துப் பழகியவர். எனக்கு இந்தப் படங்களில் இந்தப் பிரச்சாரங்களில் நம்பிக்கை போய் விட்டது. நான் ரமணரிவியை மதிப்பதைவிட எங்கள் வீட்டுக்குக் கடிதம் கொண்டு வரும் தபால்காரரை மதிக் கிறேன்; வீடு கட்டும் தொழிலாளியை மதிக்கிறேன்: வண்டியோட்டும் காரோட்டியை மதிக்கிறேன் உழைப்புக்கு மதிப்புத் தரும் காலம் வந்து விட்டது இவர்கள் எல்லாம் வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடியவர்கள் அவர்களைக் கண்டு என்னல் மதிக்க முடியவில்லை. பாராட்ட முடிய வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/98&oldid=825636" இலிருந்து மீள்விக்கப்பட்டது