பக்கம்:சிதறல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உண்மையில் அது செக்ஸ் படம் அல்ல, வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் படம் அது. "இரண்டு பேர் வாழ்க்கையைத் தொடங்குகிறர்கள். ஒருவன் துறவியானன் மற்றெருவன் உறவைத் தேடினன்; அவள் ஒரு பொது மகள்: அழகை விலைக்கு விற்ருள். விலையில்லாத அழகு அதற்கு விலை கொடுத்தார்கள்; அவன் தன் அன்பைத் தந்தான் - அவளும் அவனுக்கு அன்பைக் கற்றுத் தந்தாள். சின்ன உலகம் அழகாக இருந்தது; பாம்பு கடித்தது அவளும் இறந்தாள், அவள் மகன் அவனைக் கல்லால் அடித்தான். இருவரும் சந்திக்கிருர்கள் படகின் துடுப்பு அவர்களைப் பிடிக்கிறது; படகு ஒட்டிப் பிறரைக் கரை சேர்க்கிருர்கள். தொண்டுதான் வாழ்வின் பயன்; பண்பு. அதுதான் வாழ்வின் பயணம்' என்பதை அழகாகக் காட்டுகிறர்கள். என்ன அழகான சிந்தனை, மனிதன் இல்லறம் துறவறம் என்று வகுத்துக் கொள்கிறன். அவன் பயணம் எங்கே முடிகிறது? சமுதாய அறத்தில்தான். தொடக்கம் இல்லறம். முடிவு சமுதாயத் தொண்டு; தொடக்கம் துறவறம் முடிவு சமுதாயத் தொண்டு. இக்கருத்தை அந்தப்படம் மிக அழகாக விளக்குகிறது. - இந்தப் படங்களைப் பற்றி விமரிசித்தோம் வேறு என்ன பேச முடியும். என் சொந்த வாழ்க்கையைப் பற்றி அவனிடம் பேசமாட்டேன். அவனும் தான் வந்த விவர்த்தை எடுத்துப் பேச மாட்டான். எனக்கும் பேச ஆள் தேவைப் பட்டது. குடும்பம் ஒரு சிறையாகப்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/97&oldid=825635" இலிருந்து மீள்விக்கப்பட்டது