பக்கம்:சிதறல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 'இந்த உலகம் மாயை' என்ற அறிவு அவரை நன் ருகப் பிடித்துக்கொண்டது. - பெண் ஒரு மாயப் பிசாசு என்பது அவர் அபிப்பி ராயமாக ஆகிவிட்டது. என் காதல் கடிதங்கள் ஒவ்வொன்றும் அவரைத் தட்டி எழுப்பின. 'போ உன் மனைவியைக் கொலைசெய். அவள் வாழ்க்கை மாசுபட்டுவிட்டது. "தாடிதான் அவள் காதலன்" என்று அவன் மனச்சான்று உறுத்தியது. என்னைக் கொலைசெய்ய அவருக்குத் துணிவு பிறக்க வில்லை. அதற்கு நான் வாய்ப்பும் தரவில்லை. அவர் மன நிலையை உணர்ந்துகொண்டேன். என் கணவனைத் திருத்துவதைவிட இந்தத் தாடியை மாற்றவேண்டுவது என் கடமையாகப் பட்டது. அவன் மணம் செய்துகொண்டால் அல்லது மனம் மாறமாட் டான் என்பது தெரியும். அதற்கு வழி என்ன என்று எனக் குைத் தெரியவில்லை. நான் என் குடும்பத்திலேயே மதிக்கப்படவேண்டு மென் ருல் என் கணவனேடு வாழ்ந்து தீரவேண்டும். அவ னுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்; எது உண்மை? என் கல்லூரி வாழ்வு அனுபவங்கள் எனக்கே உரியவை; அவற்றில் அவன் நுழ்ைந்து பார்த்தது தவறு என்பதை எடுத்து உரைக்கவேண்டும். ஆஷா ஒன்று கேட்டாள். 'நீ மறுக்க மாட்டாயா?" "எதை?" "நான் கேட்பதை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/102&oldid=825417" இலிருந்து மீள்விக்கப்பட்டது