பக்கம்:சிதறல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கின்றன. ஒரு காதலுக்காகக் குழந்தையையும் இழக்கத் தயார் என்பதைச் செயலில் காட்டுகிறேன். நாம் எவ்வளவு முரண்பட்டவர்கள் பார். வாழ்க்கையே முரண்பாடுமிக் கதுதான். படித்த காலத்திலே நான் சோஷியலிசத்தைப் பற்றிக் கனவு கண்டேன்; கவிதை எழுதினேன். அரசியலைப்பற்றி விமரிசித்தேன். இப்பொழுது என் உடற் பசிக்கு ஒரு வழி தேடிக் கொள்கிறேன். என் கணவனிடம் கிடைக்காத ஒரு வாழ்வை ஏன் பச்சையாகச் சொன்னல். இன்பத்தை என் காதலனிடம் பெறத் துணிந்துவிட்டேன். நிச்சயமாக இவர் என்னைக் கைவிட மாட்டார். நானும் அவரை எந்தக் காலத்திலும் விட்டுப் பிரியேன். 'உண்மை யான காதல்’ என்பதற்கு விளக்கம் காணப் போகிறேன்" என்று விடாமல் பேசினேன். அந்த இளைஞன் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருந்தான். ஆஷாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னைக் கல்லூரியில் பேசக் கேட்டிருக் கிருர்கள். என் ஆற்றலை வியந்து இருக்கிருர்கள். ஒரு கூட் டத்துக்கு முன்னல் எப்படிப் பேசுவது என்பதை முன் கூட்டிச் சிந்தித்து இருக்கிறேன். ஆஷாவையே அதற்குக் கருத்துகள் தரும்படி கேட்டு இருக்கிறேன். இப்பொழுது திடீர் என்று இப்படிப் பேசுவேன் என்று என் நண்பர் எதிர்பார்க்கவில்லை. அவர் அசந்துவிட்டார். இது திரைப்படம் அல்ல; எட்டி இருந்து வேடிக்கை பார்க்க:வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டார். இது ரசிப்பதற்கு என்று அமைந்தது அல்ல; வாழ்வதற்கு என் பதை உணர்ந்து கெரண்டார். அம்மாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. தான் நினைத்தது உண்மை என்பதற்காக அவள் பெருமைப்பட்டாள். 'எனக்குத் தெரியும் இப்படி நடக்குமென்று. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று சொன்னல் அவள் கேட்டால் தானே. இன்று பற்றிக் கொண்டது' என்று அவள் விமர்சனம் செய்தாள். பாட்டி மூலையில் உட்கார்ந்துகொண்டு அழத் தொடங் கிள்ை. மானமே நிதானம் இழந்துபோய் விட்டதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/109&oldid=825432" இலிருந்து மீள்விக்கப்பட்டது