பக்கம்:சிதறல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 வருந்தினள். தங்கைக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அந்தக் குடும்பத்துக்குத் தேடித் தரும் அவமானம் அவளே யும் பாதிக்கும் என்பதை அவள் எண்ணிப் பார்த்தாள். இது பெரியவர்கள் விஷயம் என்று அவள் பேசாமல் மவுனம் சாதித்தாள். "அவள் தன் கணவனுடன் மனம் கோணுமல் வாழ் வது" என்று மனக்கோலம் கொண்டாள்; மணக்கோலம் ஒன்றுதான் அவள் எதிர்பார்த்தது. அப்பொழுது அவள் செம்மையாக வாழ்ந்து எனக்குப் பாடம் கற்றுத்தரக் காத்துக் கிடந்தவள் போல் காட்சி அளித்தாள். ஆஷா பேசுவதற்கு இடம் தராமல் நானே பேசிக், கொண்டிருந்தேன். "இவ்வளவு தூரம் துணிந்து விடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை." "துணிந்துதான் யாரும் கெடுவார்கள்" என்று துடுக் காகச் சொன்னேன். "உன் லட்சியங்கள் எல்லாம்” “எது லட்சியம் என்றே தெரியாமல் இருக்கிறேன், இந்த மனிதக் கூட்டத்தைப் பார்க்கிறேன். அவரவர்கள் எதை லட்சியம் என்று நினைக்கிருர்கள். பொழுது, போவது எப்படி என்பதைத்தான் லட்சியமாகக் கொண்டிருக் கிருர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சிலரே பங்கு கொள்கிருர் கள். விழாக் கொண்டாடுவதற்கு எல்லோரும் போட்டிக்கு முந்திக் கொள்கிருர்கள். ஒரு புதிய விழா என்று கூறட் டும் உடனே கூட்டம் கூடி விடுகிறர்கள். உலகத் திரை: அரங்கு படங்கள் என்று சொல்லட்டும் உடனே கூட்டம் கியூ; தொலைக்காட்சி என்று சொல்லட்டும் எப்படியாவது வாங்கிவிட முடிவு; ஊர் சுற்றிப் பார்ப்பது என்று சொல் லட்டும் உடனே உல்லாசப் பயணம். மனிதன் சுகத்தைத் தேடித்தான் அலைகிருன். * "அரசியலில்' என்ன செய்கிருர்கள். இந்த மக்களை நல்லவர்களாக ஆக்க விரும்புகிருர்கள். அதாவது பக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/110&oldid=825436" இலிருந்து மீள்விக்கப்பட்டது