பக்கம்:சிதறல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கோவில் பிரச்சாரங்களைச் செய்து விட்டு மென்மைப் படுத்த நினைக்கிறர்கள். அதாவது சமுதாயச் சிந்தனை களைத் துாண்டாமல் ஆத்ம விசாரணைகளில் ஆழ வைக் கிருர்கள். வேறு என்ன செய்ய முடியும். அரசியல்வாதிகள் தாம் பதவிக்கு வருவது எப்படி என்று திட்டம் போடுகிறர்கள். வன்முறைகளைத் தூண்டுகிறர்கள். பிறகு அது எங்கே போய் முடிகிறது. ஒரே சிதறல்தான். என் கணவன் அவர் மனம் ஒரே கலக்கம்; அதாவது மனைவி அவரது தனி உடைமை என்ற போதையில் வாழ்ந்தார். அதாவது நான் யாரோடும் பழகி இருக்கக் கூடாது. யாரும் எனக்குக் காதல் கடிதம் எழுதி இருக்கக் கூடாது. என் குழந்தையை யாரும் எடுத்துப் பாராட்டக் கூடாது. நான் அவருக்கு முழு அடிமையாக வாழ வேண்டும். என் சமுதாய உணர்வுகளை அவரால் மதிக்க முடியவில்லை. நான் இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். இந்த உடல் இந்த இளைஞன் விரும்பினல் எடுத்துக் கொள்ளட்டும். ஏன் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடாது. நான் துணிந்து நின்றேன். - அவன் கரங்கள் நடுங்கின: கற்பனை உண்மையாகும் என்று அவனுல் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "என் தவறை உணர்கிறேன்' என்ற ஒரே சொல்தான் அவன் வாயிலிருந்து பிறந்தது. 'நான் அவன் ரசனைக்கு உரியவள்; ஆல்ை அவன் வாழ்வுக்குப் பயன்படமாட்டேன்' என்பதைத்தான் அந்தச் சொற்கள் உணர்த்தின. என் கற்பனை, ரசனை, என் டையரிக்குறிப்புகள் அவ்வளவையும் எரிப்பதை விட எனக்கு வேறு வழி தோன்றவில்லை. எனக்கு என்று ஒரு தொழில் தேடிக் கொண்டேன். என் படிப்பு எனக்குப் பயன்பட்டது. என் நற்சான்றுகள் எனக்கு ஒரு நல்ல தொழிலைத் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/111&oldid=825438" இலிருந்து மீள்விக்கப்பட்டது