பக்கம்:சிதறல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 என் மீது எழுதப்பட்ட வீடு என் தங்கைக்கு மாற்றி விட்டேன். என் மான உணர்வு அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. அதை நான் பெறுவதால் தானே அவர்கள் பழிச் சொற்களுக்கு, என்னைப் பற்றி அவர்கள் பேசு வதற்கு உரிமை இருந்தது. அந்தச் சொத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். ஆஷா அன்று என் பேச்சில் ஒரு அதிர்ச்சியைக் கண்டாள். என் குழந்தை எனக்குத் தேவை என்பதை உணர்ந் தாள். மறுபடியும் அவளைச் சந்தித்தேன். அவள் ரவியிடம் பாசம் காட்டவில்லை. 'என்னுல் குழந்தை இல்லாமல் வாழ முடியாது, குழந்தை பெருததால். அவரிடம் அதைப் பெற முடியாத தால் அவரை வெறுத்தேன். எதையும் என்னை வைத்துக் கொண்டே மதித்தேன். அதனுல்தான் என் வாழ்வில் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது. அவரை வெறுக்கும் அளவுக்குச் சென்றுவிட்டேன். குழந்தை என்னைவிட உனக்குத்தான் அவசியம்" என்ருள். அதாவது கணவனை விட்டு வாழும் எனக்கு அவன் தான் ஆறுதல் தரமுடியும் என்பதை உணர்ந்தாள். நான் இப்பொழுது என் தாய், பாட்டி இவ்வுறவுகளைக் கடந்து என் காலில் நிற்கிறேன். தனி வீட்டில் வேலைக் காரக் கிழவி ஒருத்தியோடு நிம் மதியாகக் காலம் கழிக் கிறேன்.என் வாழ்க்கை ஒரு லட்சியத்தோடு இயங்குகிறது, ரவி இந்தப் புதிய பாட்டியை ரொம்பவும் நேசிக்கிருன். அவள் அவனுக்குச் சொத்துத் தரமாட்டாள். தன் உழைப்பைத் தருகிருள். அவள் அவனைத்தன் பேரனுகவே மதிக்கிருள். யார் இந்த அன்பை அவளுக்குத் தந்தார்கள். யார் இந்தக் கிழவி? இவள் ஏன் என் மீது அன்பு சொரி கிருள். இந்த நினைவுகள் என் சிந்தனையை விரிவு படுத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/112&oldid=825440" இலிருந்து மீள்விக்கப்பட்டது