பக்கம்:சிதறல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 எனக்கு உற்றவர்கள் உறவினர்கள் ஏதோ எதிர் பார்த்தார்கள். அதைநான் அவர்களுக்குத் தரமுடியவில்லை. அவர்கள் என்னை விட்டு விலகினர்கள். நான் அவர்களை விட்டு விலகினேன். புதிய உலகம், புதிய உறவு. நானே அமைத்துக் கொண்டேன். அந்தப்பாட்டி மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிருள். "ஏம்மா ரவி அப்பா வரமாட்டாரா?" "வருவார்; கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறேன்." 'எப்பொழுது?" "அவர் என்னை மதிக்கும்பொழுது" என்று சொல்லி முடித்தேன். ரவியைப் பார்த்தேன். அவன் தன்னை எடுத்துக் கொள்ள என்னிடம் அவன் கரங்களை நீட்டினன். அவனை எடுத்துக் கொண்டு அணைத்துக் கொண்டேன். 'ரவி! நீ இந்த உலகத்தில் பிறக்க அவசரப் படவில்லை; நான்தான் அவசரப் பட்டேன்; நீ எனக்குத் தேவைப் பட்டாய் நீதான் என் கதைத் தலைவன்; உன்னை வைத்தே என் கதையை அமைத்துக் கொள்வேன்' எடுத்துப்போகச் சொல்லிச் சாடை காட்டின்ை. அவனுக்கும் இந்த சின்ன உலகம் வீடு பிடிக்கவில்லை. வெளியுலகத்தைக் காண விரும்பின்ை என்பதை எண் னிப் பார்க்க முடிந்தது. மறுபடியும் அந்தக் கவிஞனின் வரிகள் என்னுள் ளத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன. "கன்னிமை என்பது பிச்சைப் பாத்திரம் தாய்மை என்பது அட்சய பாத்திரம்':.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/113&oldid=825442" இலிருந்து மீள்விக்கப்பட்டது