பக்கம்:சிதறல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஏன்? அது தெரியவில்லை. குழந்தை ரவியின் பார்வையில் கள்ளங்கபடமற்ற அன்புதான் தெரிகிறது. அவர் கண்களில் சே! வன்புதான் தெரிகிறது. என்னை ரவி தாயாக்கினான்; அவர் என்னைப் பேயாக்கினர். இதுதான் வித்தியாசம்.

காமராசன் கவிதையில் ஒரு அடி என் நினைவுக்கு வருகிறது.

கன்னிமை என்பது பிச்சைப் பாத்திரம். தாய்மை என்பது அட்சய பாத்திரம். என்ன அழகான அடிகள்.

“ரவி என்னை உயர்த்துகிறான்
அவர் என்னைத் தாழ்த்துகிறார்”

அவர் என்னிடம் அந்த ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறார். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. என் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் கணவனை நான் எதிர்பார்த்தேன். அவர் சுகத்தில் மட்டும் பங்கு கொள்ளத் துடிக்கிறார். சுகத்தில் பங்குகொள்ள அன்பு தேவை இல்லை. ஆசையிருந்தால் மட்டும் போதும். துக்கத்தில் பங்குகொள்ள அன்பு தேவை. இந்த இரண்டாவது அவரிடம் நான் காணமுடியவில்லை.

எப்படியும் அவரோடுதானே வாழ்ந்து தீரவேண்டும். என் உடலைத்தான் அவர் கேட்கிறார். என் உள்ளத்தைக் கேட்டால் தர முடியும். அதை ஒரு நாள் கூடத் தட்டிக் கொஞ்சியது இல்லை. இந்த உடலை இதமாக்க நினைத்து என்னைப் பதம் பார்க்க அறியும் அவர் என் நெஞ்சு குளிர இனிமிையாகப் பேசும் கணிவை நான் பார்த்தது இல்லை. அவரைப் பொறுத்த வரை அந்த இதயம் இரத்த ஒட்டத்தால்தான் நிரம்பிக் கிடந்தது. அன்பு ஒட்டத்தை அது அறிந்ததே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/13&oldid=1256900" இலிருந்து மீள்விக்கப்பட்டது