பக்கம்:சிதறல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

படுத்தினால் அது தெய்வீகமாகிறது என்று கூறுகிறாள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது.

என் அம்மா வேறுவிதமாக நினைக்கிறாள். என் தங்கை பிறரோடு பழகக் கூடாது என்று கூறுகிறாள். என்னைத் தேடிக்கொண்டு யாராவது வருவது வழக்கம். என்ன செய்வது நான் படித்த காலத்தில் அவர்களோடு பழகிவிட்டேன். Co-education கல்லூரியில் படித்துவிட்டு எப்படி அவர்களோடு பழகாமல் இருக்க முடியும்?

அந்த மடப் பசங்களும் சில சமயம் சரியாக நடந்து கொண்டதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கிட்டே நெருங்கிவிடுவார்கள். எல்லாரையும் அப்படிச் சொல்ல முடியாது. ஒன்று இரண்டு ‘லூஸ்கள்’ அப்படி நடந்து கொள்கின்றன. அவர்களிடத்தில் சிரித்துப் பேசிப் பழகுவோம். உடனே அவர்கள் என்ன நினைக்கிறார்கள். நாங்கள் அப்படியே இழந்துவிடுவோம் என்று நினைத்துவிடுகிறார்கள். அது எப்படி முடியும்?

அந்தப் பழக்கத்தை என் அம்மா பார்த்து இருக்கிறாள். அவர்களோடு பழகுவது பேசுவது அம்மாவுக்குப் பிடிப்பதே இல்லை. ஒருத்தர் மாதிரி ஒருவர் இருக்கமாட்டார்கள். என்பது அவள் அப்பொழுது தரும் அபாய அறிவிப்புகள்.

எனக்கு அப்பொழுது தெரியாது. ஏதோ இந்த உலகத்தில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் இருப்பதாக நினைத்தது உண்டு; அப்படி நினைத்துப் பழகிய நாட்களில் எல்லாம் என் அம்மா என்னைக் கண்டித்தே வந்தாள். எனக்கு அம்மாவின் போக்குப் பிடிப்பதே இல்லை. நான் அதெல்லாம் இப்பொழுது நினைத்து என்ன பயன்?

ரவியின் மேல் எல்லாத் தாய்மார்களும் வைப்பது போல் அளவு கடந்த அன்பு வைக்கிறேன். ஆனால் அதே அன்பை என் அத்தான், அவர்மீது வைக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/12&oldid=1255995" இலிருந்து மீள்விக்கப்பட்டது