பக்கம்:சிதறல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவரை அன்பின் வடிவமாக என்னை அறியாமல் வழிப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது.

இந்த உலகத்திலே நாம் தேடிக் கண்டது என்ன அன்புதான். அந்த அன்பைத்தான் என் ரவிக்குத் தருகிறேன். அதை அவன் முழுவதும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறேன்.

குருதிப்புனல் நாவலைப் படித்து முடித்தேன். கம்யூனிசம் இந்த நாட்டில் வரமுடியாது என்று ஆசிரியர் கூறுவதை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். ஜனநாயக சோசலிசம்' என்பது முரண்பாடான ஒன்று என்று அவர் எழுதி இருக்கிறார். ஏன்? தெரியவில்லை. ஜனநாயகம் இருக்கிற இடத்தில் சோஷலிசம் இருக்காது; சோஷலிசம் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் இருக்காது என்பதை வற்புறுத்திக் கூறுகிறார்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்டில் ஜன நாயகமும் தலை எடுக்காது; சோஷலிசமும் வராது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 'காணிக்கை என்ற நாவலைப் படித்தவுடன் இந்தச் சோர்வான எண்ணந்தான் எனக்கு உண்டாயிற்று' 'பொதுச் சொத்தை' அழிக்கும் வன்முறை தலையெடுக்கும் வரை ஜனநாயகமும் வாழாது என்பதை அந்த நாவல் அழகாக விளக்குகிறது.

அந்தக் கதையில் மது, அதி அற்புதமான படைப்பு; சமுதாய உணர்வோடு வாழ்கிறாள். அவள் தன்னைக் காத்துக் கொண்டு ஆண்களோடு பழகினாள்; மாணவர்களோடு பழகினாள்.ஆனால் தன் மாண்பினை இழக்கவில்லை. அவள் கூறும் அதிஅற்புதமான கற்பனையை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். 'ஆண்களோடு பழகமுடியும் ஆனால் அதனால் தன்னை இழக்கத் தேவை இல்லை' என்ற கருத்தைத் தெரிவிக்கிறாள். அந்த உணர்வுகளை உயர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/11&oldid=1255993" இலிருந்து மீள்விக்கப்பட்டது