பக்கம்:சிதறல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பணம்தான் வேர் பெற்றுக் கிடக்கும்; அதை வெளியே சொல்ல மாட்டார்கள்; சுமாராக இருந்தால் போதும் என்பார்கள்: ஆனால் முழு அழகு இருக்கிறதா என்று ஆராய்வார்கள். அவர்களால் எதையும் முடிவு செய்ய முடியாது. அந்த நிலையில் அவனிடம் என் நெஞ்சு போகக் கூடாது என்று கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன்; அது அவனை எட்டிப்பார்க்க வேண்டும் என்று துடிக்கும். இதைப் போன்ற அனுபவங்களுக்குப் பின்னல்தான் எனக்குத் திருமணம் நடந்தது.

அப்பொழுது நான் என் தங்கையைப் போலத்தான் இருந்தேன். என்றாலும் அவளைப்போல் மனநிறைவு எனக்கு இருந்ததே இல்லை. என்னால் அடங்கிக் கிடப்பது என்பது மட்டும் முடியாத விஷயமாகிவிட்டது. அது ஏனே தெரியவில்லை.

அந்தக் காலத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த தலைவர் காமராசர்தான். அது ஏனோ தெரியவில்லை. தலைவர் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருகிறது. அவரை நினைத்து நினைத்து எனக்கு என்னை அறியாமலேயே அரசியலில் ஒரு பற்றும், அதே சமயத்தில் அரசியல் ஆரவாரத்தில் ஒரு வெறுப்பும் தோன்ற ஆரம்பித்தன.

அரசியல் எனக்குப் பிடிப்பது இல்லை. என்றாலும் அதிலே இருந்து என்னால் விலகவும் முடிவதில்லை. 'குட்டையிலே ஊறிய மட்டைகள்' என்று அவர் யாரையோ எதையோ சொன்னது இப்பொழுதும் நினைவுக்கு வருகின்றது.

என்னுடைய வீட்டில் அவருக்கு ஒரு அழகிய படம் அவருக்காக மாட்டி வைத்திருக்கிறேன். அவர் முகத்தில் எப்பொழுதும் மென்மையான புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது. அவர் அன்பு என்னைக் கவர்ந்தது.சி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/10&oldid=1255992" இலிருந்து மீள்விக்கப்பட்டது