பக்கம்:சிதறல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

எனக்கே பிடிக்காமல் போய்விட்டது. அதற்குக் காரணம் என்ன என் நாவல் படிப்புதான். ராசீயின் நாவல்கள் என்னை மாற்றி விட்டன.

பொதுவாக இதற்கு முன்னால் நாவல்கள் படித்து இருக்கிறேன். இப்பொழுது இந்த நாவல்களைப் படித்த பின் நான் அடியோடு மாறி விட்டேன். நான் சாதாரண பெண்ணாக இருக்க முடியவில்லை. என் தங்கையைக் கண்டு வியப்பேன். அவளுக்கு வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாகச் செல்கிறது. அவளுக்கு எனக் கடமைகள் இருக்கின்றன. சுற்றுப்புறத்தை அவள் ஆராய்வதில்லை.

அவள் கனவுகள் எல்லாம் சாதாரணமானவை. ஆனால் அழகானவை. ஒவ்வொரு பெண்ணும் நினைக்கின்ற சாதாரண ஆசைகள். அதாவது படித்துக் கொண்டே இருப்பது; காலம் வரும் என்று காத்திருப்பது.

நான் நினைக்கிறேன் அந்த நாட்களை என்னைப் பெண் பார்க்க வருவார்கள். அந்த அனுபவங்கள் நினைத்துப் பார்க்கத் தக்கவை திடீர் என்று யாரோ வருவார்கள். என் நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக்கொள்ளும் அவன் எப்படி இருப்பான். ரொம்ப அழகா இருக்கக் கூடாது என்றும் நினைத்தது உண்டு. ஏன் தெரியுமா? திடீர் என்று என் மனம் அவனிடம் லயித்து விட்டால் சனியன் அவனைப் பற்றியே கனவு காண வேண்டியதுதான். அவன் நிச்சயமாக என்னை ஏற்றுக் கொள்வான் என்று எப்படிச் சொல்ல முடியும்.

இந்தக் காலத்து இளைஞர்களைக் கணக்குப் போடவே முடியாது; அவர்கள் இல்லாத ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் பெண் குணமுள்ளவளாக இருக்க வேண்டும் என்பார்கள்; அவர்கள் நெஞ்சு ஆழத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/9&oldid=1255991" இலிருந்து மீள்விக்கப்பட்டது