பக்கம்:சிதறல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ரொம்ப பேருக்குத் தெரிவதில்லை. எப்படி வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படிப் பேசுவது அநாகரிகம் என்றுதான் நினைக்கிறேன்.

"பாடுவது ஒரு தனித் தன்மை; அது எல்லாருக்கும் வராது" என்று என் ஆசிரியை ஒருவர் பாராட்டி இருக்கிறார். அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. வேலைவிட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அவள் கணவனுக்கு எங்கேயோ மாற்றலாம். அவள் வேறு என்ன செய்ய முடியும்.

"நான்தான் அவருக்குச் சமைத்துப் போடணும் ஒண்டியா அவர் எப்படிக் காலம் கடத்த முடியும்" என்று என்னிடம் அன்பு குழையப் பேசுவாள் அந்த ஆசிரியை.

"ஏம்மா அதுக்காக ஐந்நூறு ரூபாய் உத்தியோகத்தை இழக்க முடியுமா? என்று கேட்டேன்.

"உத்தியோகமா பெரிசு?"

அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்.

அவளுக்கு அதிலே ஒரு லட்சியம்; அவள் லட்சியக் கனவு தன் கணவனிடம் இருந்தது. என் லட்சியக் கனவுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/15&oldid=1256906" இலிருந்து மீள்விக்கப்பட்டது