பக்கம்:சிதறல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

லட்சியம் உயர்ந்ததுதான். நாம் மட்டும் உயர்ந்த லட்சியங்களை வைத்துக் கொண்டு இருக்கிறோம்; சுற்றுப்புறம் அவற்றை அலட்சியப்படுத்தும்பொழுது அந்த லட்சியங்கள் பாழாகின்றன. பாழாகக் கூடாது. அதற்குத் தான் என் வாழ்வின் போராட்டமே.

'பாலிய சிநேகிதன்' என்று அவனைக் கூறமுடியாது. பாதியில் வந்த நண்பன்தான் அவன்; அவனிடத்திலே ஒரு லட்சியக் கனவைக் காண்கிறேன். அதனால்தான் அவனிடம் என் மனம் தாவுகிறது. யாரோ சில பேர் உயர்ந்த லட்சியங்களோடு வாழ்கிறார்கள் வாழ முயல்கிறார்கள். அதனால்தான் இந்த வாழ்க்கை வாழப் பிடிக்கிறது.

அந்த ஆசிரியையை நினைத்துப் பார்க்கிறேன். அவளுக்குக் கிடைக்க முடியாத உத்தியோகம் அது. அவளுக்கு ஏதோ ஒரு அதிருஷ்டம் என்றுதான் கூறமுடியும். இந்தக் காலத்தில் ஒருவர் சுமாராக வாழ்க்கையை நடத்துவதையே இப்படித்தானே சொல்லிப் பழகிவிட்டோம். அதனால்தான் நான் இப்படிச் சொல்ல வேண்டியது ஆயிற்று. அதாவது தகுதிக்கு ஏற்பத் தொழில் கிடைத்தாலேயே அதை அதிருஷ்டம் என்று சொல்லவேண்டி இருக்கிறது. ஏன் அந்தத் தகுதிக்கு ஏற்பப் பல பேருக்கு வாழ்க்கை அமைவது இல்லை அதல்னாதான்.

அவள் தன் கணவன் மீது உயிர் விடுகிறாள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியம் அவள் போக்கை ஒட்டி அல்ல; எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காதது பற்றி; அவள் ஆசிரியை என்றாலே என்னைவிட மூத்தவள் என்று தான் நினைப்பார்கள். மூத்தவள் தான். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/16&oldid=1256909" இலிருந்து மீள்விக்கப்பட்டது