பக்கம்:சிதறல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

சொன்னால் 'ஆசை' என்று தான் சொல்ல வேண்டும். அவள் கணவனிடம் அளவு மிக்க ஆசை வைத்திருந்தாள்.

உண்மையில் அவளைக் கண்டு நான் ஒரு வகையில் பொருமைப்படுகிறேன். அவள் என்னைவிட அழகி என்று கூறமுடியாது. அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. அதை அவள் எப்படிச் சொல்லுவாள். சொல்லவும் கூடாது தான். அதனல் தான் அவள் அவனை அப்படி உயிர் விட்டு நேசிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

என் மகன் ரவியின் முகத்தைப் பார்ப்பேன். "ஏனடா நீ பிறந்தாய் என்று கேட்பேன். நீ பிறக்காவிட்டால் நான் ஹாப்பியாக ஏதாவது தொழில் செய்து கொண்டு வாழ்வு பூராவும் ஒரு மிஸ்ஸாகவே காலம் கடத்தியிருப்பேன்" அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

"அம்மா நீ விரும்பித்தான் நான் பிறந்தேன்” என்று அவன் சொல்வது போல இருந்தது.

இந்தக் காலத்திலே வளர்ந்த பிள்ளைகள் பெரியவர்களைப் பார்த்துக் கேட்கிறர்கள், "நீ ஏன் பெற்றுக் கொண்டாய்? பெற்றுக் கொள்ளத் தெரிந்தது காப்பாற்றத் தெரியவில்லையா? என்று பச்சையாகக் கேட்கிறார்கள்.

அவர்களைப் பெற்றபோது அவர்கள் சின்னகுழந்தைகள். இப்பொழுது அவர்கள் மிகப் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாதோ அதைக் கூசாமல் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். எதை நினைவுபடுத்தக் கூடாதோ அதை நினைவுபடுத்திவிடுகிறார்கள்.

அதே நினைவை ரவி சிரித்து எழுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/20&oldid=1255994" இலிருந்து மீள்விக்கப்பட்டது