பக்கம்:சிதறல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

என்று சொல்லுவால். அது நமக்கு அடிமையாகக் கிடக்க வேண்டும் என்று சொல்லுவாள். அது என்க்கு அப்பொழுது விளங்கியது இல்லை. அவள் வேலையை விட்ட பிறகுதான் தெரிந்தது நிலையான தொழிலைவிட்டுத் தன் கணவனோடு வாழ வேண்டும் என்று நினைத்தாள்; நினைப்பதில் என்ன லட்சியம் இருக்கிறது; செயல்படுத்தினாள். அதில் அவள் லட்சியத்தைக் காணமுடிந்தது.

அப்படி ஒன்றும் அவள் வசதி மிக்கவள் என்றும் கூற முடியாது; வசதி இல்லை என்றும் கூறமுடியாது. நான் மட்டும் என்ன? எனக்கு என்ன இருக்கிறது. அம்மா எனக்கு எழுதிவைத்த வீடு அதில் வரும் குடிக்கூலி. அதை மாதம் மாதம் பென்ஷன் போல வாங்கி வருகிறேன், என் கணவன் மட்டும் என்னை எதற்காக மணம் செய்து கொண்டார். அந்த வீட்டுக்குத் தானே.

இதில் ஒரு ஆச்சரியம். அதையும் சொல்லிவிடுகிறேன். நேரே அவர் என்னை வந்து பார்க்கவில்லை. வீட்டைத்தான் வந்து பார்த்தார். வீடு அவருக்குப் பிடித்து இருந்தது, இப்பொழுது விற்றால்கூட ஐம்பதினாயிரம் போகும். திருடன் கிட்டே கொடுத்தால் கூட அதற்கு நாற்பதாயிரம் மதிப்பு இருக்கிறது என்று சொன்னாராம். 'காய்ந்த மாடு கம்பங்கொல்லையிலே புகுந்தாற் போல' என்று சொல்வார்கள். பாவம் அவர் வறுமை அவருக்குத் தெரியும். திட்டமிட்ட வாழ்க்கை வாழ நினைத்தார். அதில் அவர் கைப்பற்ற நினைத்தது முதலில் இந்த வீடு: பிறகு தான் நான்.

பாவம் அவரை மட்டும் குறை கூறிப் பயன் என்ன? யாரோ சிலர்தான் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் விரும்பும் கணவனைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் மெல்ல மெல்ல விரும்பத் தொடங்கி விடுகிறர்கள். இதுதான் உலக உண்மை. என் ஆசிரியை சினேகிதி அதுதான் ஆஷா. அது தான் அவள் பெயர். அதைப் பச்சைத் தமிழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/19&oldid=1256918" இலிருந்து மீள்விக்கப்பட்டது