பக்கம்:சிதறல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

அந்த ஆசிரியரைப் பற்றி நினைக்கும்பொழுது பல ஆசிரியர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். என்ன செய்வது. எதுவும் ஒடாவிட்டால் அவர்களைப் பற்றித்தான் நினைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. நூலகத்தில் சதா உழன்று கொண்டு இருப்பார். பார்த்தால் பரிதாபமாக இருக்கும், இவருக்குச் சொந்த முளையே இருக்காதா என்று நினைப்பேன். அதாவது ஏதாவது குறிப்பு எடுத்துக் கொண்டு இருப்பார். போர் ஒரே போர் சொந்தமாக ஒன்றும் சொல்லத் தெரிவதில்லை.

அவரிடம் ஒரு கெட்ட பழக்கம். வகுப்பில் எங்களை நிமிர்ந்து பார்க்கமாட்டார். ஏன் தெரியாது. ரொம்ப நாளாகத் தெரியாது. பிறகுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கு என்று எந்தத் தனித் தன்மையும் கிடையாது என்று. அவர் ஒரு புத்தகப் புழு. சதா வகுப்பில் எழுத வைத்துக் கையொடிப்பார்.

இன்னோருவர் இருக்கிறார். உரத்த குரலில் பேசுவார். அங்கே நாங்கள் இருப்பது நாற்பது பேர்தான். அவர் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டியவர். காது புளித்து விடும். நாங்கள் கவனிக்கவில்லை என்றால் அவர் குரல் மேலே உயர்ந்துவிடும். எங்களைப் பேச ஒட்டாதபடி தடுக்க ஒரே வழி அவர் கூச்சல் போட்டுப் பேசுவது.

சிலபேர் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்.ரயில் வண்டியின் ஒட்டம் அப்படித்தான்.அதன் இரைச்சலில் நாம் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்பதில்லை, அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது உண்டு.

லட்சியமே இல்லாத ஆசிரியர்களுக்கிடையே அந்த ஆசிரியையிடம், லட்சியம் இருந்தது. அவள் பணத்தை மதிப்பதே இல்லை.அதற்காக நாம் அடிமை ஆகக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/18&oldid=1256917" இலிருந்து மீள்விக்கப்பட்டது