பக்கம்:சிதறல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பேன்.அவள்களுள் ஒருவன் தான் காதல் கடிதம் எழுதி இருந்தான். அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அந்தக் கூட்டத்தில் நான் எப்படி அவனைக் கண்டு பிடிக்க முடியும்.

அந்தக் கடிதம் உண்மையிலேயே ஒரு அழகிய கவிதையாக இருந்தது. அந்தக் கவிதைப் பயித்தியம் ஆசிரியர் எழுதும் கவிதையைப் போலவே இருக்கும்.

"நீ எங்கே இருக்கிறாய்?
அங்கே நானும் வந்தால் என்ன?
நாம் இருவர் ஆவோம்
அது தனி உலகம்"

என்று அழகாக எழுதி இருந்தான்.

ஒருவர் மட்டும் வாழ்ந்தால் அது உலகம் ஆகாது. உண்மையில் நான் எண்ணிப் பார்க்கிறேன். நானும் ரவியும் ஒரு உலகம். நானும் அவரும் தான் ஒரு உலகமாக இருந்தோம். இணைபிரியாமல் இருந்தோம்-ஆனால் நீடிக்க முடியவில்லை.

ரவி பிறந்ததும் அவருக்கு என் மீது பிடிப்பு நெகிழ ஆரம்பித்தது , முக்கியமாக நான் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்கு வந்தேன், அந்தச் சில மாதங்களில் அவர் மாறிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் பல அம்புகளைத் தாங்கி இருக்கிறேன், மன்மதன் அம்பு போடுவான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவை மன அம்புகள். இவை காகித அம்புகள். கல்லூரியில் பேரவை ஒன்று இருக்கிறது. அதற்குக் காந்தி மன்றம் என்று பெயர். இப்படித்தானே பெயர்கள், வைக்கிறார்கள், பேரவைகள் எல்லாம் பெரியவர்களுக்கு நினைவுச் சின்னங்களாக மாறி விடுகின்றன. ஒரு சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/30&oldid=1258291" இலிருந்து மீள்விக்கப்பட்டது