பக்கம்:சிதறல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இடங்களிள் வள்ளுவர் மண்டபம் என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும். நான் ஒரு வாயாடி, அதாவது சுழற்கோப்பைப் பேச்சாளி, அதாவது எங்கள் கல்லூரியில் இரண்டு பேரைத் தேர்ந்து எடுப்பார்கள்.

நாங்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று பேசுவோம். எங்களுக்குப் பலவிதமான பேச்சுத் தலைப்புகள் கொடுப்பார்கள், "சட்டத்தால் இந்த நாட்டைத் திருத்த முடியுமா?. என்று கொடுப்பார்கள் "சாதி ஒழிப்பால் இந்த நாட்டில் சோசலிசம் கொண்டுவர முடியும்" என்று பேசி இருக்கிறேன்.

எனக்குப் பிடித்த தலைப்பு 'பெண் உரிமை'தான்.

"சமுதாயப் பணியில் பெண்களின் இடம் என்று பேசி இருக்கிறேன். ஒரு மேடையில் வாங்கு வாங்கு என்று வாங்கி இருக்கிறேன்.

"பெண் இந்த நாட்டிலே ஒரு தொழிலாளியாக மாறுகிறாள். ஆண்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். அவர்கள் சம்பாதித்து அவர்களைக் காப்பாற்றும் நிலை இந்த நாட்டில் பெருகிவிட்டது. ஆண்கள் படிக்காமல் வேலை நிறுத்தம் செய்து கொண்டு தம் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். நாங்கள் அமைதியாகப் படிக்கிறோம். இதன் விளைவு என்ன? நாங்கள் எதிர்காலத்தில் நல்ல உத்தியோகங்களுக்கு மனுப் போட்டு வெற்றி பெறுவோம். ஆண்கள் தோற்று வேலையில்லாமல் கஷ்டப்படுவார்கள். பிறகு என்ன செய்வார்கள். நாங்கள் வெளியிலே அதிகாரிகளாக இருப்போம்; வீட்டில் அவர்களுக்கு அடங்கி வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முன்னெல்லாம் பெண்கள் இந்த வகையில் ஆண்களை வீட்டில் இருந்து கொண்டு அதிகாரம் செய்து கொண்டு இருந்தார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/31&oldid=1280018" இலிருந்து மீள்விக்கப்பட்டது