பக்கம்:சிதறல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

கள். நாங்கள் இப்பொழுது அவர்களுக்கு வீட்டில் அடங்கிக் கிடக்க வேண்டியதுதான்."யார் சும்மா இருக்கிறர்களோ, அவர்கள்தானே அதிகாரம் பண்ணுவது இயற்கை. உழைப்பவர்கள் என்றும் அடங்கிக் கிடக்க வேண்டும். என்பது உலக இயற்கைதானே" என்று நான் பேசி இருக்கிறேன்.

என் எதிர்தரப்புப் பேச்சாளர்கள் அதை வெட்டிப் பேசி இருக்கிறார்கள்."நாங்கள் வீரர்கள். இந்தச் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பது எங்கள் கடமையாகிறது. நாங்கள் கிளர்ச்சிகள் செய்யாவிட்டால் இந்த நாட்டில் யார் அதைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்கள், நாங்கள் தியாகிகளாகிறோம். நீங்கள் அதன் பயனை அனுபவிக்கிறீர்கள்.” மாணவர்கள் இன்று சிந்தனையாளர்களாக மாறிவிட்டார்கள்."நாங்கள் அரசியல்காரர்களுக்கு அடிமையல்ல; அவர்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த நாட்டில் அறிவாளிகள் தேவை.

இன்று ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள். சிலம்பு ஒலித்துக் கொண்டு இருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் பழமையின் பெருமையை வரலாகறாக எடுத்துக் கொள்ளுகிறார்கள்.அவர்களுக்குள் எத்தனை பேர் நாட்டின் நிகழ்ச்சியோடு ஒத்துச் செல்கிறார்கள். இன்று அண்டை அயல் மாநிலங்களில் பாருங்கள், எவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

புதிய எழுத்து வேகமாக வளர்கிறது. இங்கே எழுத்ததிகாரம் நடத்துகிறார்கள். அதற்கு உரை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கே சமுதாயச் சிந்தனைகளைப் புதினங்களில் வடித்துத் தருகிறார்கள். இங்கே இல்லறம் துறவறம் என்ற அறக் கோட்பாடுகளைப் பற்றி ஆராய்கிறார்கள். அங்கே பாட்டாளி வர்க்கம் எப்படி எழுச்சி பெறுவது என்பதைப் பற்றிப் பேசுகிறார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/32&oldid=1280020" இலிருந்து மீள்விக்கப்பட்டது