பக்கம்:சிதறல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கள் இங்கே மறு உலகம் எப்படி இந்த உலகத்தில் தியானம் செய்து பெற முடியும் என்று சிந்தனை செய்யச் சொல்லித் தருகிறார்கள். வெட்கப்பட வேண்டிய ஒன்று. புதிய எழுச்சி இலக்கியத்தில் இல்லை. இதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்" என்று மறுத்துப் பேசுவான்.

அவன் என்ன நினைத்துப் பேசுகிறான் என்பது தெரியாது.யாரோ எழுதிக் கொடுத்ததைக்கொண்டு வந்து பேசுவான். இல்லாவிட்டால் இந்த மாதிரி தொடர்பு இல்லாமல் ஏன் அவன் பேசவேண்டும்.

இதைப் போலப் பல மேடைகளில் பேசிக் கைதட்டல் பெற்றிருக்கிறேன். பிறகுதான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் என் பேச்சுக்குக் கைதட்டவில்லை என்று. எனக்காகவே தட்டி இருக்கிறார்கள். என் பேச்சுக்கு அது வெற்றி அல்ல; எனக்கு அது வெற்றிதானே. எனக்குக் கொஞ்சம் கர்வமும் இருந்தது. அதாவது என்னை வரவேற்கும் அந்த ஆரவார உலகம், இன்றும் நான் மறக்க முடியவில்லை.

முதலில் ஒரே பயமாக இருக்கும். படபடப்பும் இருக்கும். சொல்வதே வராது. போகப் போகச் சரியாகப் போய் விட்டது. ஒன்றே ஒன்று சில சமயம் எனக்கு வேண்டுமென்றே மதிப்பெண் போட்டு வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வது இல்லை.

இரக்கத்தால் நாம் உயர்வு பெறக் கூடாது என்ற எண்ணம் அவ்வப்பொழுது எனக்குத் தோன்றும். வெற்றி உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்கள் விரும்பித் தரும் வெற்றியை நான் அடைய விரும்பியது இல்லை. இந்தக் காட்சிகளை எல்லாம் இப்பொழுது பார்க்கிறேன். அதன் அவசியம் எனக்கு இப்பொழுது உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/33&oldid=1280021" இலிருந்து மீள்விக்கப்பட்டது