பக்கம்:சிதறல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

முடிகிறது. ரவி அவற்றை வைத்து விளையாடிக் கொண்டு இருப்பான். அவனுக்குத் சொப்புகள் வாங்கித் தரத் தேவை இல்லாமல் போய்விட்டது. அவற்றை வைத்துக் கொண்டு உருட்டுவான். நான் மேடையில் உருட்டிய பேச்சின் விளையாட்டை அவன் விளையாட்டில் காண முடிந்தது. என் பேச்சொலியை அவன் தட்டி வீழ்த்தும் அந்தக் கப்புகளின் உருட்டலில் கேட்டேன்.

'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பது அழகான உருவகமாகப்பட்டது; அரசியல் தலைவர் வேறு எப்படி எதிர்க் கட்சிகளை விமரிசிக்க முடியும். 'காமராசர் ஒரு சகாப்தம்' அது முடிந்துவிட்டது. புதிய சகாப்தம் தோன்றி இருக்கிறது. அதை அவரால் பார்க்க முடியவில்லை. பொதுவாகவே இந்த நாட்டில் பழைய தலைவர்கள் மாறாதது வளர்ச்சிக்குத் தடை என்று எண்ணிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

காந்தியோடு பழகியவர்கள் இன்றும் பலபேர் உயிரோடு இருக்கிறார்கள். காந்தியடிகள் தனிமனிதரின் ஒழுக்க உயர்வில் நம்பிக்கை உள்ளவர். அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர் காமராசர். மற்றும் அவருக்கு ஏழைகள் உயர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் எப்படி உயரவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

அவர்கள் காலமெல்லாம் நேரடி அரசியலில் கழிந்து விட்டது. யார் தலைமைப் பதவிக்கு வருவது; யாரை அமைச்சராக்குவது என்ற நினைப்பில் செயலில் அவர் காலம் சென்றுவிட்டது. பெரியார் பகுத்தறிவு வாதத்தைப் புகுத்தி மடமையைப் போக்கினார். அண்ணா புதிய சிந்தனைகளை இளைஞர்களிடம் புகுத்தினர். ஏழை சிரிக்கவேண்டும் என்று எண்ணினார். குப்பத்து மக்களுக்கு அரசியல் ஞானத்தை ஏற்படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/34&oldid=1280022" இலிருந்து மீள்விக்கப்பட்டது