பக்கம்:சிதறல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

நடித்தான். நான் அவன் காதல் செய்யும் ஹீரோயினாக நடித்தேன். அவன் என்னிடம் துணிந்து உணர்ச்சிபடக் காதல் மொழி பேசுவான். ரிஹர்சலில் அது ஒவர். நாடகத்தில் அதைக் கேட்டு ஒரே சிரிப்பு. ஆடியன்சு ஒரே ஆரவாரம். எனக்கு ஒரே வெட்கமாய்ப் போய்விட்டது. துணிந்து அவன் நெருங்கிவிட்டான். நான் எப்படி ஒட முடியும். அந்தச் சமயம் என் கண்ணைப் பறித்த ஒளி. அது தான் காமிராவின் மின் ஒளி. அந்த நிலையில் அது படத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

நான் வாழ்க்கையில் யாரையும் காதலித்தது இல்லை’ ஆனால் அது காதல் கட்டமாக அமைந்துவிட்டது. அவன் பிறகு என்னைக் காதலித்து இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. அவன் அந்தப் படத்தைப் பத்திரப் படுத்தினான். நான் அதைப் பத்திரப் படுத்தவில்லை.

நான் பத்திரப்படுத்திய படம் காமராசரோடு நான் நின்றுகொண்டிருந்த படம்; அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அவர் என்னுள் ஊடுருவி நிற்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் அவரை எனக்குள் நிறுத்திக் கொண்டேன்.

அண்ணாசாலை வழியாகச் செல்லும் வாய்ப்பு ஏற்படும் பொழுது நிமிர்ந்த நெஞ்சரை நினைத்துப் பார்ப்பேன் அவருக்கு நான் மாலையிட வேண்டும் என்று நினைப்பது உண்டு. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைப்பது இல்லை, என் அவர் எனக்கு மாலையிட்ட பிறகு நான் யாருக்குமே மாலையிடாத வீட்டுவாழ்வு கவ்விக் கொண்டது. அரசியல் வாழ்வு என்னை விட்டு நீங்கிவிட்டது.

என் தனிப்பட்ட வாழ்வில் அக்கறை காட்டிய ஆசிரியர்களும் இருந்தார்கள். இந்த மாதிரி கூட்டங்களுக்கு நான் போவதை அவர்கள் விரும்புவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/38&oldid=1280029" இலிருந்து மீள்விக்கப்பட்டது