பக்கம்:சிதறல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

"அரசியல் உணர்வு எதற்கு?" என்று அறிவுரை சொன்னவர்களும் உண்டு.

மேடைப் பேச்சை நிறுத்திக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.

தேர்வுகள் பயம் காட்டி என் பொதுச் சிந்தனைகளைக் குறைக்கப் பார்த்தார்கள்.

எனக்கு ஒரே எரிச்சல். என்ன படிப்பு வேண்டி இருக்கிறது என்று தோன்றும். சுற்றுப்புறத்தைக் கவனிக்காமல் நாம் நம்மைப் பற்றியே கவனித்துக் கொள்வது எனக்குப் பிடிப்பது இல்லை.

ஒருசிலர் பச்சையாகச் சொல்லிக் கொள்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். யார் எப்படிப் போனால் நமக்கு என்ன. நாம் படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பேசக் கேட்டு இருக்கிறேன். இது மேல்நிலையில் சொல்லப்படும் சாதாரண உத்தியோகஸ்தர்களின் போக்கைத்தான் நினைவுறுத்துகிறது."எப்படியாவது நாலு காசு சம்பாதிக்க வேண்டும்” என்று நினைக்கும் போக்குதான் அது. இதைப்போல ஒவ்வொருவரும் நினைத்தால் பொதுப் பிரச்சனைகளைப் பற்றி யார் சிந்திப்பது. எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வகையில் அரசியல் கட்சிக்காரர்களை எனக்குப் பிடிக்கிறது. அவர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களையும் அறியாமல் சமுதாய உணர்வில் ஈடுபடுகிறார்கள். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும். சிந்திக்க முடியும். அவ்வளவுதான். அரசியலில் நேரிடையாகப் பங்கு கொள்ள முடியாதுதான்; அதற்காக ஆயிரம்பேர் இருக்கிறார்கள். என்னைப்போலச் சில பேர் தூர இருந்து எண்ணிப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுகூடத் தவறு என்று ஒரு சில ஆசிரியர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/39&oldid=1280031" இலிருந்து மீள்விக்கப்பட்டது