பக்கம்:சிதறல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கண்டித்து வந்தார்கள். அவர்கள் என் வாழ்வில் அக்கறை காட்டியவர்கள். அவர்கள் உலகம் அமைதியான உலகம்; அவர்களைக் கண்டு சில சமயம் பொருமை பட்டதும் உண்டு.

வெளியே போராட்டங்கள் நடக்கும். அவர்கள் செயலிழந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். துணிந்து அவர்கள் மாணவர்களை அணுகிப் பேச முடியாது; பேசவும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் ஏதோ சில கட்டுப்பாடுகளுக்கு அடங்கி வாழ்க்கையை அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்த நெருப்பில் விழாமல் எச்சரிக்கை செய்வதை மட்டும் பார்க்கிறேன்.

நானும் எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராகப் பணிசெய்ய வேண்டும் என்ற ஆசை உந்தியது. பல புரட்சி மிக்க மாணவர்கள் ஆசிரியப் பணி ஏற்றதும் இருக்கின்ற இடம் தெரியாமல் மங்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை மட்டும் என்ன? குடும்பப் பணியை ஏற்ற பிறகு நான் என்ன ஆனேன். ரவி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். அதைப் பார்த்து ரசிக்கிறேன். என் உலகம் எவ்வளவு சின்னதாக அமைந்துவிட்டது.

"நான் இங்கே நீ அங்கே
நாம் இருவரும் ஒன்று சேருவோம்
இது ஒரு புதிய உலகம்"

என்ற கருத்துப்பட அந்த மாணவ அன்பன் எனக்கு அம்பு விட்டுத் தெரிவித்தான். அந்த இருவராக நானும் ரவியுமாக இருக்கிறோம். அவனை விட்டு நான் எப்படி நீங்க முடியும். அவர் என் மீது வெறுப்புக் கொள்ளலாம். அவர் என் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றத்தைக் கண்டு விட்டார். பொதுவாகப் படித்த பெண்கள் படிப்பு முடிந்ததும் அந்தச் சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடுகிறர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/40&oldid=1280032" இலிருந்து மீள்விக்கப்பட்டது