பக்கம்:சிதறல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அவள் அந்தக் குடும்ப வேலியில் அகப்படுத்தப்பட்டாள். கணவன் அவளை நம்ப மறுத்தான்; அதனால் அவள் தனியாக இங்கு வேலைசெய்ய முடியாமல் போய்விட்டது. "அவர் நம்பமாட்டார்" என்று கூறினாள். அதனால்தான் வேலையை விட்டேன் என்று தெளிவுபடுத்தினாள்.

"ஏன் இரண்டுபேரும் ஒரே இடத்தில் வேலை செய்ய முடியவில்லை. அதற்கு அவர் தொழில் இடம் கொடுக்கவில்லை. அது கம்பெனி வேலை; அரசாங்க வேலை அல்ல".

"நீ அந்த ஊருக்கு மாற்றிக்கொள்ளலாமே"

"அங்கே அரசாங்கக் கல்லூரி இல்லை" என்று கூறினாள்.

இது எனக்குப் பரிதாபமாகவே இருந்தது. எனக்கு அவளைப்போல் ஒரு வேலை கிடைத்தால் நிச்சயமாக விட்டு இருக்கமாட்டேன். பெண்ணின் உயர்வே தன் உழைப்பில்தான் இருக்கிறது, கணவனுக்கு மனைவியாக மட்டும் வாழும் வாழ்க்கை எனக்குப் பிடிப்பது இல்லை.

நானும் உண்மையைச் சொல்லி இருக்கலாம். எது உண்மை? நான் அவனைக் காதலிக்கவில்லை. அவன் என்னைக் காதலித்தான். அவன்மட்டும் என்ன? யார் யார் என்னிடம் பழகினர்களோ அவர்கள் எல்லாம் என்னை விரும்பாமல் இல்லை. பெண்ணின் வாழ்ச்கையில் இது சாதாரணம். அதுவும் படித்த பெண்ணின் வாழ்வில் இப்படி எந்த அனுபவமும் ஏற்படவில்லை என்றால் அவள் படித்த நாட்கள் வீண்தான்.

நான் பஸ்ஸில் போவேன்; வேறு எப்படி போகமுடியும். சில சமயம் மேல்பிடியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போவேன். எத்தனையோபேர், நான் மென்மென்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/43&oldid=1280536" இலிருந்து மீள்விக்கப்பட்டது