பக்கம்:சிதறல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தான் வகுப்பில் நடந்தவற்றை எல்லாம் பேசிக் கொண்டு இருப்பாள். அவள் விஞ்ஞானம் படிக்கிறாள் என்று நினைக்கிறேன் அந்த பரிசோதனை அறையில் நடந்த சோதனைகளைப் பற்றியே பேசுவாள் அவளிடம் நான் பேச வேண்டும் என்று நினைத்தது உண்டு ஆனால் சந்தர்ப்பமே கிடைத்தது இல்லை.

அந்த முதல் டிக்கட்டு நண்பன் அடிக்கடி அதே பஸ்ஸில்தான் ஏறுவான். அவனுக்கு என்னிடம் தனிக் கவர்ச்சி. சும்மா அதே பஸ்ஸில் வருவது, அவனுக்கு ஒரு தனிப்பொழுது போக்கு. 'சோடி சி பாத்' படம் பார்த்திருப்பீர்களே. ரொம்ப தமாஷான படம். அவன் சும்மா இவளையே பார்த்துக் கொண்டு இருப்பான். அவன் போகிற இடமெல்லாம் பின்னால் தொடருவான்; அவள் நின்றால் தானும் நிற்பான். படம் எடுத்தால் அப்படி எடுக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு.

சமீபத்தில் ஒரு படம் வந்தது. அதுதான் உலகப்பட விழா நடந்ததே அப்பொழுது பார்த்தேன். இரண்டு மூன்று நாள் போனேன், என்னமோ எதிர்பார்த்து ஏமாந்து போனர்கள் எவ்வளவோ பேர். படம் ஏதோ சென்சார் இல்லையாம். அதுக்கு இவ்வளவு கூட்டம் என்று மொத்தமாகக் கேள்விபட்டேன். பார்க்கத்கூடாத காட்சிகள் இடம் பெற்றதால் அதைப் பார்க்கத் தவறக் கூடாது என்பது அங்கு வந்த கூட்டத்தின் நினைவுகள்.

பாவம் வந்து உட்காருவார்கள் 'போர்’ என்று சொல்லி விட்டு எழுவார்கள் அதில் என்ன தைரியமாகக் கட்டி முத்தம் தருகிறார்கள். சேர்த்து அணைத்துக் கொண்டு ஒரே படுக்கையில் உருள்கிறார்கள்.

நான் சிரித்துக் கொண்டேன். 'sex starvation' ரொம்ப அதிகம் நம் நாட்டில் என்பதை அப்பொழுது உணரத் தொடங்கினேன். அந்த விழாவிலே மறக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/45&oldid=1280539" இலிருந்து மீள்விக்கப்பட்டது