பக்கம்:சிதறல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

சம்பவம் ஏதோ ஒரு படமாம் பெயர் நான் கேட்கவில்லை கிரிக்கெட் மாட்சுக்கு முன்னிடம் பிடிப்பது போல் இரவே 'கியூ' நின்றுவிட்டனர். ஒரே 'Crazy' அவ்வளவுதான் சொல்ல முடியும். அன்று பெண்கள் கியூவில் நின்றார்கள். எதற்கு என்று தெரியவில்லை. அவமானப்பட வேண்டிய விஷயம். அன்று அறுபது பேருக்கு மேல் லத்திசார்ஜ் நடந்ததாம். தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு வந்தனர்.

நம் நாட்டில் ‘சென்சார்’ இல்லாமல் படம் பிடிக்க உரிமை கொடுத்தால் என்ன ஆகும். பொது மனைக்குப் போகமாட்டார்கள். கீழ்பாக்கத்துக்குத்தான் போவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். திரைப்பட அனுபவத்தில் இது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். நான் ஏதோ என் கதையைச் சொல்ல வந்தவிடத்தில் என்னையும் மீறி ஊர்க் கதையைப் பேசிவிட்டேன். ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அந்தப் படத்துக்கு அவர்கள் விற்ற டிக்கட்டு பத்துதான் என்று சொன்னர்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது; அந்தப் பத்தும் பிளாக் மார்க்கெட்டில் ஒவ்வொன்றும் அறுநூறு ரூபாய்க்கு விற்கப் பட்டதாம். பிறகுதான் கியூவில் நின்றவர்கள் அடிபட்டவர்கள் யார்? எதற்காக நின்றார்கள் என்பதும் விளங்கியது. மறுநாள் ஒரு பெரிய ஏமாற்றம். அது நூறு ரூபாய்க்கு வாங்கிய டிக்கட்டை அடுத்த ஷோவுக்கு ஐந்து ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஏன் நிறைய வெட்டி எடுத்துவிட்டார்களாம்.

சில சமயம் நினைப்பது உண்டு. அந்த முதல் டிக்கட்டோடு நெருங்கிப் பழகினால் என்ன? சே! பழகக்கூடாது. பேரு கெட்டுவிடும். எப்படியோ ஆண்பிள்ளைகளோடு பழகக்கூடாது என்ற உறுத்தல் மட்டும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. அது நல்லது தானே. இப்படி எல்லாம் என்னை அடக்கிக் கொண்டுதான் வாழ்ந்தேன். ஏன் அப்படித்தான் எல்லாரும் வாழ்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/46&oldid=1280540" இலிருந்து மீள்விக்கப்பட்டது