பக்கம்:சிதறல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

குருசேவ்' இந்தப்படம்தான் அது. அவன் ஒரு கொள்ளைக்காரன். கடல் கொந்தளிப்பிலே வழி தவறி ஒரு தீவுக்குள் போய்விடுகிறான். கையிலே ஒரு துப்பாக்கி. அங்கே நீக்ரோ காட்டு மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களைச் சுட்டுத் தள்ளி அச்சுறுத்தி ஒருவனை அடிமைப்படுத்துகிறான். அவனுக்கு மொழி கற்றுத் தருகிறான். அவனைத் துப்பாக்கி காட்டியே அச்சுறுத்தி வேலை வாங்குகிறான்.பிறகு பணத்தால் பணிய வைக்கிறான். அதுவும் தீர்ந்த பிறகு கடவுளைக் காட்டி அவனை அடிமைப்படுத்த முயல்கிறான். பாவம் அவன் வெற்றி பெற முடியவில்லை. அந்த அடிமை திரும்பிக் கொள்கிறான். அடிமை முரண் கொள்கிறான். அவன் கையில் துப்பாக்கி ஏந்தியதும் இவன் அடிபணிந்து விடுகிறான்.

என்ன அழகான கருத்து, உருவகம். பணக்கார நாடுகள் தம் அணுசக்தி பலத்தால் சிறு நாடுகளை அடிமைப்படுத்தி விடுகின்றன. இல்லாவிட்டால் உதவிகளைக் காட்டி அடிமைப்படுத்துகிறார்கள். இரண்டும் பலிக்காவிட்டால் தெய்வம், சமயம், பணம், பலம், கடவுள், கொள்கை இவற்றால்தான் அடிமைப்படுத்த முடியும். அடிமைப்பட்டுக் கிடந்தவன் துப்பாக்கி எடுத்துக் கொண்டால் இவன் கதி என்ன ஆகிறது.

'ஒடப்பர் எல்லாம் உதையப்பர்
ஆகிவிட்டால் எல்லாரும்
ஒப்பப்பர் ஆகிவிடுவர்'

என்ற பாரதிதாசனின் கவிதைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

அந்தப் படத்தை என்னால் மறக்க முடிவதே இல்லை.

அதோடு வானெலி நிலையத்துக்குப் போயிருந்த போது ஒரு நிகழ்ச்சி, அதையும் மறக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/48&oldid=1285022" இலிருந்து மீள்விக்கப்பட்டது