பக்கம்:சிதறல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அங்கே ஒரு எந்திரத்தின் முன்னால் நிற்பது போன்ற உணர்ச்சிதான் இருந்தது. அங்கே பணிசெய்த பெருமக்கள் அனைவரும் வெறும் இயந்திரம் போல் காணப்பட்டார்கள். சிரிப்பதுகூட அவர்களுக்கு ஒரு சம்பிரதாயமாகக் காணப்பட்டது.

அதாவது 'மது ஒழிப்பு' எப்படி அமுலுக்குக்கொண்டு வருவது என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் கலந்துகொள்ளவில்லை. தூர இருந்து கேட்டுக் கொண்டு இருந்தேன். எனக்கு ‘யூத் புரோகிராம்’ காத்துக் கிடந்தது. அதாவது நாங்கள் எப்படி இந்த உலகத்தைப் பார்க்கிறோம் என்பதுதான் விவாதம். எங்களுக்கு விருப்பமான நாடகப் பாட்டு ஏதோ தயார் செய்தோம். எல்லாம் ஒரே குழப்பம்தான். ஏதோ சிரித்தோம். பாவம் அந்த டைரக்டர். வறண்ட சிரிப்பு எங்களோடு சிரித்தார். எங்களிடத்தில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் சிரித்தோம் அவர் சிரித்தார்.

அதைவிட டெலிவிஷன் புரோகிராமுக்குப் போனேன். அது பிடித்து இருந்தது. முக்கியமாக அந்த மேக்கப் அறை. அவர்கள் ரொம்பவும் நன்றாகப் பழகுகிறார்கள். ரொம்பநாள் பழகியவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்' எனக்கு மேக்கப் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் எங்கே கேட்கிறார்கள். ‘light touch’ செய்து அனுப்பிவிடுகிறார்கள். நான் ரொம்பவும் அழகாக இருந்தேன்.

அந்த வானெலி நிலையத்தில் அந்தப் பெரிய மனிதர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் சொன்னார் முதலில் சாராயம் விற்பவர்களைத் தடுக்க வேண்டும் என்றார்.

"சரி அவனுக்குத் தொழில்" என்ற கேள்வியை எழுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/49&oldid=1285023" இலிருந்து மீள்விக்கப்பட்டது