பக்கம்:சிதறல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

"வாங்குபவர் இருப்பதால் தானே குடிக்கிறார்கள்' என்றார் ஒருவர்.

"வாங்குகிறவர்கள் இருப்பதால்தானே வாங்குகிறாகள்" என்றார் மற்றொருவர்.

ஒரு டாக்டர் சொன்னார், அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்து அங்கே ஒட்ட முடியாமல். வெளியே வந்து விட்டார். அவர் சொன்னர். "என் நண்பர்கள் சில பேர் இருக்கிறார்கள், ஐந்து மணி வரை வேலை செய்கிறார்கள். அதற்குமேல் பொழுது போவது இல்லை. அதனால்தான் குடிக்கிறார்கள்' என்று சொன்னார்.

"இப்போ புரட்சி நடிகர் நடிப்பது இல்லை. அதனால் அந்த மாதிரி சண்டைப் படங்கள் வறட்சி" என்றார் மற்றொருவர். அவர் புரட்சி நடிகரின் சீடர் என்பது தெரிந்து கொண்டேன்.

"சினிமா ஒன்றுதான் ஏழைகளுக்குப் பொழுது போக்கு" என்றார். "வேறு என்ன அவர்களுக்குத் தர முடியும்?" என்று கேட்டார்.

மற்றொருவர் பேசினார். "இது கூடாது அது கூடாது என்று எல்லாவற்றையும் தடுத்து விடுகிறோம், பிறகு அவர்கள் எதை வைத்து வாழ்வது" என்று கூறினார்.

எனக்கு இந்த உலகமே அப்பொழுதுதான் தெரிகிறது.

"சந்தோஷம் என்பது மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகிவிட்டது" என்பதைத் தெரிந்து கொண்டேன்.

சினிமா, கடவுள், கோயில், பஜனை, காலட்சேபங்கள் இவைகளும் மனிதனுக்குப் பொழுது போக்கத் தேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/50&oldid=1285024" இலிருந்து மீள்விக்கப்பட்டது