பக்கம்:சிதறல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கைப்பாவைகளாக பிரபல ஆசிரியர்கள் திகழ்கிறார்கள் என்று விளக்குகிறார்.

மக்கள் எப்படியாவது தாம் மட்டும் வாழ்ந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இந்த நாட்டில் அமைதியைத் தேடி அலைகிறார்கள். வெளிநாட்டில் வளர்ச்சியைத் தேடி உழைக்கிறார்கள். வாழ்க்கையிலிருந்து தப்பி ஒட முயல்வதுதான் இந்த நாட்டு சித்தாந்தம். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது மேல்நாட்டுப் போக்கு என்று அடிக்கடி சொல்வார்.

நான் அவ்வப்பொழுது அவர் கவிதைகளில் ஈடுபடுவது உண்டு. அவர் கையெழுத்துப் போட்ட அந்த முதல் பிரதியைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதை மட்டும் யாருக்கும் கொடுக்கமாட்டேன்.

ஒரு நகைச் சுவையை என்னால் மறக்க முடியவில்லை.

அவர் பிறர் மினம் புண்படுகிறதே என்பதற்காகக் கவலைப்பட்டது இல்லை. அதற்கு அவர் கவிதையை அதற்காகப் பயன்படுத்துவார். மேற்போக்கான பொருள் ஒன்றும் உள்ளே ஒரு பொழுதும் அமையப் பேசுவதில் அவர் வல்லவராக இருந்தார். கவிதையில் நகைச்சுவையை அவரால் புகுத்த முடிந்தது. இலக்கியத்தில் அது ஒரு புதுமையாக இருந்தது.

'அவன் ஒரு தொழு நோயாளி அவன் கடவுளைத் தொழுதான் அவன் ஒரு தொழுநோயாளி'

என்பதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

பெரியார் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை மூன்று வார்த்தையில் அவரால் சொல்ல முடிந்தது. கவிதைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/54&oldid=1285028" இலிருந்து மீள்விக்கப்பட்டது