பக்கம்:சிதறல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உரிய ஆற்றல். அப்பொழுதுதான் விளங்கியது. கவிதை ஆற்றல் மிக்கது. அது மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்; அது மட்டும் அவன் நரம்புகளை நிமிர்த்தி வீறு கொள்ளச் செய்யும் என்று கூறுவார்.

அவர் முற்போக்கான கருத்துகள் எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. இப்படி ஒருசில ஆசிரியர்கள் வாழ்வதால்தான் மாணவர்கள் நல்லதில் நம்பிக்கை கொள்கிறார்கள். கேவலம் பணம்தான் பெரிது என்று நம்பிக்கொண்டும் பிரச்சாரம் செய்து கொண்டும் வாழும் கீழ்மக்களின் இடையே இப்படி ஒரு சில லட்சியவாதிகளும் வாழும் பொழுது வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது. அவருடைய எழுத்து மாறவேண்டும் என்பது என் ஆசை. கவிஞர்கள் நேரிடையான பிரச்சனைகளில் ஈடுபட முடிவதில்லை. நாவலாசிரியர்கள் ஈடுபட முடியும் என்பது என் நினைவு. மக்களைத் திசை திருப்பிவிடும் எழுத்துக்கள் மிக்க சூழ்நிலையில் தொடர்ந்து அவர்கள் வளர்ச்சியைக் காட்டும் எழுத்து அடிப்படை என்பதை அவருக்கு எடுத்துச் சொன்னேன்.

அவர், "நான் இந்த ஆசிரியர் பணியில் இருக்கும் வரை முழு எழுத்தாளன் ஆக முடியாது. நாங்கள் அரசியல் சமுதாய நேரிடையான பிரச்சனைகளில் ஈடுபட முடியாது; சட்டம் அதற்கு இடம் தராது. மேலும் நாங்கள் பணி செய்யும் நிறுவனங்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடும் என்று விளக்கினர்'.

அப்பொழுதுதான் புரிந்தது. அவர் ஏன் நாவல் எழுதுவது இல்லை என்று. நாவல் எழுதுபவர் பெரும்பாலும் பத்திரிகை ஆசிரியர்களாகத்தான் இருக்க முடியும். அவர்களுக்கு அரசியல் சமுதாயச் சிந்தனைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/55&oldid=1285029" இலிருந்து மீள்விக்கப்பட்டது