பக்கம்:சிதறல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

அதை என்னால் ஏற்றுகொள்ள முடிவதில்லை.எனக்கே நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை எழுவது உண்டு. ஆனால் அதை மட்டும் செய்ய வேண்டாம் என்று அவர் அறிவுரை சொல்லி இருக்கிறார், அதில் உன் சொந்தவாழ்வு வெளிப்பட்டுவிடும். சிலவற்றை மறைத்து வைத்து வாழ்வதுதான் அறிவுடைமை. அதை வெளிப்படுத்துவதால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள். அதிலும் பெண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.

நான் ஒரு சிறு கதை எழுதி இருக்கிறேன். அதில் ஒரு பெண் தன் இதயத்தை ஒருவனுக்கு அர்ப்பணித்து விடுகிறாள். என்னமோ தெரியவில்லை. அவன் அவள் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறான்.

"என் இதயத்தில் நீ முழு இடம் பெற்றுவிட்டாய் உன்னை அகற்ற நான் முயல்கிறேன்."

"நீ பெயர மறுக்கிறாய்”

என்று அவள் சொல்லுவதாக ஒரு வாசகம் வருகிறது

"அந்த இடம் எனக்கு இதம் தருகிறது. இதம் தருவதால்தானே அது இதயம் ஆகிறது. நீ இடம் தர மறுத்தால் நான் எங்கே குடிபோவேன். மணமாகாத எனக்கு யார் குடி இருக்க வீடு தருவார்கள். நான் எங்கே சுற்றினாலும் எனக்கு ஒய்வு கொள்ள ஒரு இடம் வேண்டாமா? அந்த இடம் உன் இதயம்தான்" என்று அவன் பதில் பேசுகிறான்.

"இதயக் கோயிலில் உன்னை நிறுத்துகிறேன். என் கண்ணிரைச் சொரிந்து உன்னைக் குளிப்பாட்டுவேன்; என் சுவாசத்தால் உனக்கு இனிமையான தென்றலைப் படைப்பேன். என் இனிய பேச்சால் உனக்கு இசை எழுப்பிக் காட்டுவேன். என் உணர்வுகளால் உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/56&oldid=1287887" இலிருந்து மீள்விக்கப்பட்டது