பக்கம்:சிதறல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வைத்து அசைத்துத் தாலாட்டித் துயில வைப்பேன்" என்று அவள் பதில் எழுதுகிறாள்.

"ஏன் உன் இதயத்தைக் கேட்கிறேன் தெரியுமா? அது மென்மையாக இருந்தாலும் உழைப்பாளியின் உழைப்பைப் போல உன்னதமானது" உறுதியானது என்று அவன் பதில் எழுதுவான்.

இப்படி ஏதேதோ கற்பனைக் காதல் என்ற ஒரு கதையை எழுதித் தந்தேன். அது கல்லூரி மலரில் வெளியாகி இருந்தது.

அந்தக் கவிதைப் பயித்திய ஆசிரியருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

"உன் எழுத்தில் கவிதை மணம் வீசுகிறது. நீ சிறந்த கவியாவாய்" என்று பாராட்டினார்.

அதை மட்டும் நான் விரும்பவில்லை. நான் எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ மாற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன்.

"ஏன்" இது அவன் கேட்ட கேள்வி.

சாதாரண அனுபவங்களை எழுதுவதுதான் இலக்கியப் படைப்பு என்ற கருத்து நிலவி வருகிறது. பெண் எழுத்தாளர்கள் அவர்கள் வீட்டுப் பிரச்சனைகளை எழுதுகிறார்கள். சாதாரண குடும்ப உறவுகளைத் தீட்டுகிறார்கள். அவ்வளவுதான் எழுத முடிகிறது. இவை மலிந்து விட்டன. நானும் அவர்களுள் ஒருத்தியாக விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டேன்.

"அப்பொழுது நீ என்னம்மா செய்யப் போகிறாய்?"

"என் பாட்டி எனக்கு ஒரு வீடு வைத்திருக்கிறார்கள். அதில் மாதம் ஐந்நூறு ரூபாய் வரும். அதை வைத்துக் கொண்டு வாழ முடியும்" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/57&oldid=1287889" இலிருந்து மீள்விக்கப்பட்டது