பக்கம்:சிதறல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

"நீ மட்டுமா?"

நான் சிரித்தேன்.

அவருக்கும் திருமண அழைப்பு அனுப்பி இருந்தேன். அவர் தலைமையில்தான் எங்கள் திருமணமே நடந்தது.

"திருமணம் என்பது மிகக் குறுகிய எல்லைக்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு வீடும் குறுகிய எல்லைக்குள் இயங்குகிறது. சமுதாய வீதியில் நாம் உலவ வேண்டும் என்ற நினைவு எழுவது இல்லை. அவர்கள் வீட்டு முற்றத்திலேயே காற்று வாங்கினால் போதும் என்று நினைக்கிறார்கள். இது மாறவேண்டும்' என்று கூறினார்.

ரொம்ப பேர் திருமண நாளில் அறிவுரை சொல்லிக் கேட்டு இருக்கிறேன். அளவோடு பெற்று வளமாக வாழவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதைக் கேட்கும் போது மணவாழ்வின் அடிப்படையை அவர்கள் விளக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் நேசித்து வாழவேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

சில பேருக்குப் பேசத் தெரிவது இல்லை. சீர்திருத்த மணம் எவ்வளவு அவசியம் என்பதைப் பேசுவார்கள். சிலபேர் அந்த மேடையையும் அரசியல் மேடையாக மாற்றிவிடுகிறார்கள். என் மணநாள் அப்படி அமைய வில்லை. அந்தக் கவிஞர் ஆசிரியரைத் தலைமை தாங்கும் படி நடத்திக்கொண்டேன்.

அந்த மணத்துக்கு அந்தச் சினிமா நண்பனும் வந்திருந்தான். அவன் முகத்தில் அன்று மகிழ்ச்சியே இல்லை. அவன் மனைவிக்கே திருமணம் நடப்பது போன்ற உணர்ச்சி அவனுக்கு இருந்தது போல் இருந்தது. அவனுக்கு உரிய ஒருத்தியை யாரோ ஒருவன் உரிமை கொண்டாட வருவது போல் அவனுக்கு இருந்தது.சி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/58&oldid=1287890" இலிருந்து மீள்விக்கப்பட்டது