பக்கம்:சிதறல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதறல்கள்.

"நாம் அவசரப்படுவதில்லை. இந்தக் குழந்தைகள் தாம் அவசரப்படுகின்ற்ன. இந்த உலகத்தைக் காண்பதற்கு"-என்று எங்கோ ஒரு நாவலில் படித்தேன்.

அந்த அடிகள் தாம் வருகின்றன, இந்த ரவியைப் பார்க்கும் பொழுது; அவனை அறிமுகப்படுத்தாமல் எப்படி அவன் கதையைச் சொல்ல முடியும். ஏன் அவன்தான் இந்தக் கதாநாயகன். கதாநாயகன் என்றால் அவன் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் இப்பொழுது எதிர்பார்ப்பதில்லை. அவன் ஒரு நாயகிக்கு நாயகனாக இருக்க வேண்டும் அவ்வளவுதானே. ரவி ஆறடி வளரவில்லை. அவன் என்ன நிலமா? நான் அடியால் அளப்பதற்கு; ஆனால் கோபம் வரும்பொழுது சில அடிகள் அடித்திருக்கிறேன். அவன் வீறிட்டு அழுவான்.

அவனைப் பார்க்கும்பொழுது பரிதாபகரமாக இருக்கும். அவன் என்னைப் பார்த்து ஏங்குவான். அம்மா என்று கதற மாட்டான்; அந்தச் சொற்களை அவன் முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை. அவன் கற்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. முதல் பாடம் அம்மாதான்.

அவனுக்கு நான் எங்கே அம்மா என்று சொல்லிக் கொடுத்தேன். ‘மம்மி’ என்று தானே மற்றவர்கள் அவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்கள்.

அவன் என் குழந்தை; ஆனால் அழகாக இல்லை. அவன் அப்பனை அப்படியே உரித்து வைத்து இருக்கிறான். அதனால்தான் அவனைப் பார்த்தால் எனக்குப் பிடிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/6&oldid=1255582" இலிருந்து மீள்விக்கப்பட்டது