பக்கம்:சிதறல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

"உன்னை நான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நீ என் உள்ளத்தில் ஒரு ஓவியமாக நின்று விட்டாய், நீ மேடையில் பேசும் ஒவ்வொரு பேச்சையும் நான் ரசித்து இருக்கிறேன். நீ உன் பேச்சில் என்னைக் கவர்ந்திருக்கிறாய். உன் நா வன்மையை வியந்து இருக்கிறேன். நீ உன் பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று கடிதம் வரும்.

மற்றொரு கடிதம் வரும்.

"நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன்னை எப்படியாவது மணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதே நினைவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று எழுதி அனுப்புவான்.

நடிகைகளுக்கும் பாடகிகளுக்கும் இந்த மாதிரிக் கடிதங்கள் வரும்; பார்த்திருக்கிறேன். எழுத்தாளர்களுக்கும் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுழற் கோப்பைப் பேச்சாளிக்கும் கடிதங்கள் வருகின்றன என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

யாரும் அழகுச்சுவை கெட எதுவும் எழுத மாட்டார்கள். எல்லாம் கண்ணியமாகவே இருக்கும். அவன் ஊர் பேர் தெரியாமல் வரும் ரசனைக் கடிதங்களை நான் ஸ்டாம்பு சேர்ப்பது போலப் பொழுது போக்காகச் சேர்த்து வைப்பது உண்டு. இதை ஒரு ஆல்பமாகவே பைல் செய்து வைத்திருக்கிறேன்.

யாருக்குமே என் பிறந்த நாளைப் பற்றிச் சொன்னது இல்லை. அது அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. ஒன்று என் விடுமுறை விண்ணப்பத்தில் எழுதி இருக்க வேண்டும் அல்லது என் சினேகிதர்களுக்குச் சொல்லி இருக்க வேண்டும். அவர்களிடம் சொன்னலே அது எப்படியோ பரவி விடுகிறது. அவர்கள் மட்டும் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/60&oldid=1287892" இலிருந்து மீள்விக்கப்பட்டது