பக்கம்:சிதறல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

வருமே அந்தப் பாட்டுப் பயித்தியம் ஒன்றும் அதிகம், டிரஸ் பண்ணுவது இல்லை. ரொம்ப சிம்பிள். அது முதல்லே கூட வர அச்சப்படும். அதன் அச்சம் நியாயமானது என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன். அந்த அம்மையார் இன்னும் அம்மையார் ஆகவில்லை. ஆசிரியர், மனைவி அதனால் அப்படிக் குறிப்பிட்டேன். அவர்கள் என்னைத்தான் கவனித்தார்கள். அவளை அதிகமாக வரவேற்றுப் பேசவில்லை.

எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்தக் காலத்திலே ரொம்ப படிக்காதவர்களும் பேராசிரியர்களின் மனைவியின் இடத்தைப் பிடித்து இருக்கிறார்கள் என்பதை. அந்தக் கவிதைப் பயித்தியம் தனக்கு அடங்கி இருக்க வேண்டுமானால் அவள் அதிகம் படிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்து வந்தார். பல பேர் படித்த மனைவியை விரும்புவதில்லை. படிப்பு எதற்கு என்று கேட்கிறார்கள்.

ஒரு சில பேராசிரியர்கள் பார்த்து இருக்கிறேன். மனைவியும் பட்டம் வாங்கி விடுகிறார்கள், இருவரும் சேர்ந்து கூட்டங்களுக்கு வந்து விடுகிறார்கள். ஒருவர் தலைமை; மற்றொருவர் பேச்சாளர். இரண்டு பேரும் சேர்ந்து நூல்கள் வெளியிடுகிறார்கள். படைப்புக்கு இருவர் தேவைப்படலாம். இலக்கியத்துக்கு இருவர் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியதும் ஒரு சிலருக்குத் தலைகால் தெரிவதில்லை; அவர்கள் தம்மைப் பிரமாதப்படுத்திக் கொள்கிறார்கள். நான்கூட அவர்களை வியந்தது உண்டு; பிறகு தான் தெரிந்தது அவர்கள் வெறும் போலிகள் என்பது.

இவை எல்லாம் நான் படித்த காலத்தில் கண்டு, கேட்டு, உற்று, அறிந்து கொண்ட அனுபவங்களாக இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/70&oldid=1288619" இலிருந்து மீள்விக்கப்பட்டது