பக்கம்:சிதறல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70 7 என் தங்கை என்னைவிட உயரமாக வளர்ந்தாள் அவளைப் பார்த்து நான் பூரித்துப் போவேன்; எனக்கும் மணமாகாமல் இருந்தால் நானும் உயரமாகத் தான் வளர்ந்திருப்பேன். எப்படியோ அகலமாகப் பெருக்கவில்லை. அதுவரை சந்தோஷப்பட வேண்டியதுதான். நான் நினைப்பது தவறுகள் இருக்கலாம்; பொதுவாகக் கலியாணமாகாமல் இருந்தால் உயரமாக வளர்ந்திருக்கலாம் என்று நினைப்பது உண்டு. அப்படி நான் ஒன்றும் படு குள்ளம் அல்ல. என் தங்கையை விடக் கொஞ்சம் குறைவு. ஆனால் சராசரி பெண்களுள் ஒருத்தியாகத் தான் இருந்துவந்தேன். அவள் மட்டும் வெட வெடவென்று உயர்ந்துவிட்டாள். அம்மா சொல்லுகிறாள், அவள் படிக்கத் தேவை இல்லை. படிப்புச் சில சமயம் குடும்ப வாழ்க்கைக்கு உதவுவதில்லை என்பது அவள் என்னைக் கொண்டு கற்றுக் கொண்ட பாடமாக இருந்தது. "அவள் படிக்கட்டும்மா" "ஆமாம் நீ படித்துக் கிழித்தே அவள் படிக்க வேண்டியது ஒன்றுதான் குறைவு" என்று அவள் வெறுப்புக் கலந்த குரலில் பொறுப்போடு பேசுவது போலப் பேசுவாள். அவள் பேசுவது ஒரு தனி ரகமாக இருக்கும். தங்கை அவள்தான் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வாள். அது அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பைத் தந்தது. அவள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருந்தாள். ரொம்ப பேர் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பேர் எப்பொழுதும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/71&oldid=1522798" இலிருந்து மீள்விக்கப்பட்டது