பக்கம்:சிதறல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

71 எங்கள் வீட்டுக்குப் பழைய உறவினர் ஒருவர் வருவார். அவர் ஏதோ பெரிய உத்தியோகமாம். அவர் மெதுவாகப் பேசுவார். அதாவது சொற்கள். வேகமாக வருவது இல்லை. அவ்வளவு பொறுமைசாலியை என் அனுபவத்தில் நான் கண்டதே இல்லை. ஆனல் அவரோடு பேசுவது எனக்குப் பிடிப்பது இல்லை. வேகமாக வளரும் இந்த உலகத்தில் மெதுவாக ஆர அமரப் பேசுபவர்களைப் பார்த்தாலே பிடிப்பது இல்லை. சிலருக்குப் பதிலே பேசத் தெரிவது இல்லை. எல்லாம் கேள்விகளாகவே இருக்கும். அவர்களுக்கு எப்பொழுதும் எதிலும் எரிச்சல். அவர்கள் இவருக்கு நேரிடையானவர் என்று நினைக்கிறேன். அந்தப் பெரிய மனிதர் என்று சொன்னேனே அவர் மனைவிதான் எனக்கு ஒரு அதிசயமான பிறவியாக இருந்தாள். கிராமத்திலே இருந்து சென்னைக்கு வந்து வாழ்க்கைப் பட்டவள். அவள் அப்படி ஒன்றும் பெரிய இடத்துப்பெண் அல்ல அவருக்கு வாழ்க்கைப்பட. அவரும் சேற்றில் முளைத்த செந்தாமரை என்று தான் தன்னைச் சொல்லிக் கொள்வார். அதாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததாகச் சொல்லிக் கொள்வார். அதையும் அவர் ரொம்பு நிதானமாகவே சொல்லுவார், நாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலே ரொம்பவும் கஷ்டப்பட்ட வர்கள். இரண்டு சட்டை, இரண்டு வேட்டி இதுதான் எங்கள் தொடக்கம் என்பார். அதையே மாற்றி மாற்றிப் போட்டுக் கட்டிக் கொள்வாராம். அதை ஒரு பெருமை யாகத் சொல்லிக் கொள்வார். அந்த வறுமைக் காலத்திலேதான் அந்தப் பெருமைக்கு உரிய அவர் மனைவி. அவர் வாழ்க்கைத் துணையானாள். அன்று அவள் எந்த ஒலக்குரலை எழுப்பினளோ அதே ஒலக்குரலைத்தான் இன்றும் எழுப்புகிருள். அவள் குரலில் அழுகையைத் தவிர நான் வேறு எதையும் கண்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/72&oldid=1522808" இலிருந்து மீள்விக்கப்பட்டது