பக்கம்:சிதறல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தேவரே நீ எப்பொழுது வருவாய்? நான் பாவம் செய்தேன்; தேவரே நீ எப்பொழுது வருவாய்? நான் பாவம் செய்தேன்: ஆனல் எப்பொழுது செய்தேன்? தெரியவில்லை." என்ற கவிதையை எங்கோ கேட்டு இருக்கிறேன். அந்த ஒலக்குரலைத்தான் அவர்கள் பேச்சில் கேட்பேன். "என்னங்க செய்வது?" என்று அடிக்கடி அவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். t 'நாம் எல்லாம் பழம் வாங்கிச் சாப்பிட கட்டுப்படி யாகுமா என்று பேசும் பெரிய மனிதர்களின் குரலைப் போல் அது இருக்கும். இப்படி ஒருவர் பேசக் கேட்டிருக் கிறேன். அவரோடு நானும் என் உறவினர் ஒருவரும் காரில் போய்க் கொண்டிருந்தோம். அவர் மிகப் பெரிய பணக்காரர். மற்றவர்கள் தம்மைக் கண்டு பொருமைப் படக் கூடாது என்பதற்காக அவர் இந்த மாதிரி சொன் னர். எவ்வளவு முரண்பாடு; எவ்வளவு கயமை இது என்று எண்ணிப் பார்த்தேன். அவர் வீட்டுக்குச் சென்றபோது பழங்களை நிறைய சாப்பிட்டுத் துப்பிக் கிடந்தது. அவர் அறையில் ஒரே குப்பை. இப்படியும் பேசுவது அவருக்கு நாகரிகமாக அவருக்குப் பட்டது. அவர் இப்பொழுது இங்கு இல்லை. வெளியூருக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். என்னமோ திடீர் என்று அந்தத் தம்பதிகள் எனக்கு நினைவுக்கு வந்தனர். அதாவது பதில் பேசுவதில் மூன்று ரகம் இருக்கின்றன என்று சொல்ல வந்தேன். ஒன்று என் உறவினர் அவரைப் போல; மற்றென்று கேள்வி கேட்டே பதில் சொல்வது மூன்ருவது அழுகையைத் தவிர வேறு தெரியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/73&oldid=825582" இலிருந்து மீள்விக்கப்பட்டது