பக்கம்:சிதறல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஜன்மங்கள். இதில் என் அம்மாவின் பதிலே பிடித்து இருந்தது. விரக்தியில் வேகமாகத்தான் பேசுவார்கள். அதாவது நான் படித்துக் கணவைேடு வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தவில்லை என்பது அம்மா சாற்றும் குற்றச் சாட்டு. நான் எப்படி அதற்குப் பொறுப்பு? அவர் திடீர் என்று முறித்துக் கொண்டு போனல் நான் என்ன செய்ய முடியும்? மாடா என்ன கயிறு மாட்டி இழுத்துக் கொண்டு வந்து பிடிக்க. அப்படி என்ன அவரோடு இனிமையாக வாழவில்லை. வாழ்ந்த நாட்கள் மிக இனிமையாகச் சென்றன. இந்த உடல் பொருள் ஆவி முன்றையும் எனக்கே தந்துவிட்டதாகத் தான் சொன்னர். எனக்கு ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதுவும் நான் கிறுக்கிய கிறுக்கல் தான, அவள் அவன் ஆருயிர்க் காதலி: அது எப்படித் தெரிந்தது? அவன் சொன்னன், "என் உடல் பொருள் ஆவி முன்றையும் உனக்கே தருவேன்' என்ருன். இது அவன் அவளைப் பார்த்துச் சொன்னது: அதல்ை அவள் அவன் ஆருயிர்க் காதலி ஆளுள்: அவள் அதற்கு என்ன சொன்னுள் தெரியுமா? - உன் உடல் இயங்க உன் உயிர் தேவை; எனக்கு வேண்டியது வெறும் பொருள்தான்' என் ருள். அந்தக் கவிதைதான் அவள் பேசும்போது எனக்குக் கவனம் வரும். இவர் உடல் உயிர் யாருக்கு வேண்டும். அர்த்தமற்ற சொற்கள்! அன்பு வேண்டும். முக்கியமாக ఉజ్జ 44 தெரிந்து கொண்டால் போதும் என் நடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/74&oldid=825584" இலிருந்து மீள்விக்கப்பட்டது