பக்கம்:சிதறல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இடை, உடைஇதிலே அவன் நெஞ்சு பறிகொடுக்க வேண்டும். நான் செய்யும் சிறு தொழில்களில் அவன் சித்திரம் காணவேண்டும். என் தனிப்பட்ட வாழ்க்கையில் குறை கண்டதுதான் எங்கள் முறிவுக்குக் காரணம். 'நான் மறந்து விட்டேன். எனக்கு ஒரு கவிதை நண் பன் இருந்தான். அவன், "நான் ஒரு கவிஞன் ஆனேன்" என்று கவிதை எழுதி இருந்தான். அதை எனக்கு அனுப்பி வைத்தான். அவன் யார் என்று தெரியாது; ஆனால் அவன் கவிதை மட்டும் எனக்குக் கிட்ைத்தது. பேணு நண்பர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர் கள். அது போல அவன் கவிதை நண்பன். கவிதைகள் எழுதி எனக்கு அவ்வப்பொழுது அனுப்பி வந்தான். அதில் இது மிக்க துடிப்புடன் கூடிய கவிதையாக இருந்தது. அவளை அடிக்கடி பார்ப்பேன். ஏன் ? அவள் அழகாக இருந்தாள்; அது மட்டும் அல்ல, என் உள்ளத்தைக் கவர்ந்தாள் எப்படி? நல்ல உயரம் ஒல்லியான உடம்பு விழுவது போல இருப்பாள் விழமாட்டாள் சிரிப்பது போல இருப்பாள் சிரிக்கமாட்டாள் தினம் ஒரு ஸ்டைல் தினம் ஒரு கொண்டை அவள் நெற்றியில் விழும் சில சுருள் அதுவே ஒரு தனி அழகு. பொட்டுகள் மாற்றுவாள்; ஒருநாள் நீலம்; ஒரு நாள் சிவப்பு: ஒரு நாள் பச்சை. : இன்னொரு காரணம் அதுவும் சொல்கிறேன். அவள் சேலை நெகிழும்; இடுப்புத் தெரியும்: அங்கேயும் ஒரு பொட்டு; அதுதான் கொப்பூழ். இது ஒரு பியூட்டி. அது கூட அவள்தான் காட்டி என்னை மயக்கிள்ை; அதனல் கவிஞன் ஆனேன். இந்தப் பாட்டையும் நான் என் டைரியோடு ஒட்டி வதிைருந்தேன்.த் அவன் நிச்சயமாக என்னைப் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/75&oldid=825586" இலிருந்து மீள்விக்கப்பட்டது