பக்கம்:சிதறல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 எழுதி இருக்க முடியாது. அப்படி நான் அவனைக் கவர்ந் திருந்தால் அதற்காக நான் பெருமைப்பட வேண்டியது தான். எனக்கு உண்மையிலேயே அந்தப் பெண் எப்படி இருப்பாள் என்று பார்க்கத் தோன்றும், அவள் நிச்சயமாக எங்காவது உலவிக் கொண்டுதான் இருப்பாள். அது அந் தக் கவிஞன் எழுத்தில் வெளிப்பட்டது. இந்தப் பாட்டு எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கக் கூடாது. இலக்கியத் தரம் வாய்ந்தது அல்ல என்று தெரிந்திருந்தும் ஏன் அதை வைத்திருக்க வேண்டும். பெண்கள் அதை ரசிக்கமாட்டார்கள். ஆண்கள்தாம் ரசிப்பார்கள். என் கல்லூரி அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்காகத்தான் அதையும் எடுத்து வைத்திருக்கிறேன். மற்றெரு கவிதை எனக்கு வந்தது. துடிப்பு என்ற தலைப் பு இடப்பட்டு இருந்தது. - "உன்னைக் காணத் துடித்தேன்; ஆனல் சந்திக்க விரும்பவில்லை. உனக்காக ஒராயிரம் கவிகள் எழுதுவேன்; ஆல்ை வெளியிட விரும்பவில்லை." இந்தக் கடிதங்கள் எல்லாம் என் வாழ்க்கையைக் கெடுக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்தக் கவிதைப் பயித்தியம் ஆசிரியரோடு பழகி நானும் கவிதைப் பயித்தியம் ஆகிவிட்டேன் என்று நினைக் கிறேன். - அப்பொழுது ஒரு கவிதைப் போட்டி வைத்திருந்தார் கள். அதில் பரிசு பெற்ற கவிதையை இன்றும் நினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/76&oldid=825588" இலிருந்து மீள்விக்கப்பட்டது