பக்கம்:சிதறல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கிறேன். அதற்குப் பிறகு நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன், கதைக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம். கதைக்குக் கால்கை உண்டு. கவிதைக்கு இவை இல்லை. ஆனல் விதை உண்டு." இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இப்படிப் பல. கவிதைகள் கேட்டேன்; படித்தேன்; படைத்தேன். அந்த நாட்கள் இனிமையாகவே கழிந்தன. அந்த ஆசிரியர் நாவல் மட்டும் எழுதவேண்டாம் என்று கூறினர். அதை நான் கேட்கவில்லை. அங்கேயும் ஒரு தவறு செய்துவிட்டேன். நான் எழுதும்போது பரிசு பெறும் என்று நினைப்பேன். ஆனல் எழுதி முடித்த பிறகு அந்த இழிநிலைக்கு என் எழுத் துப் போகக் கூடாது என்று முடிவுக்கு வருவேன். ஏன் ஒருவர் பரிசு பெற்றுவிட்டால் விடாமல் அவரையே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள். விளம்பரம் கலையை ல் மறைத்து விடுகிறது. உண்மைக்கு விளம்பரம் தேவை இல்லை; தாகை அது பரவிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு. . நான் கலையை நம்பி வாழ விரும்பவில்லை. கதை எழுதுவது எனக்குச் சித்திரம் வரைவதைப் போன்ற ஒரு பழக்கம். வாழ்க்கையின் ரசனைதான் கவிதை, கதை என்று நினைப்பது உண்டு. ஏன், என் மணவாழ்வையே ஏன் ஒரு சித்திரமாக எழுதக் கூடாது. இப்படி ஒரு துாண்டுதல் எழுந்தது. அதில் சில வரிகள் இவை, "அவர் என்னைப் பார்க்க வந்தார்;எனக்கு ஒரே பயம். அவர் என்னை மணக்கமாட்டார் என்பதற்காக அல்ல. மணந்து கொண்டால் நான் கவிதை வானில் வண்ணச் சிறகு அடித்துப் பறக்க முடியாது. அவர் என்னைக் கையில் ஏந்திச் சின்னக் கதை சொல்வார். சிங்கார வாழ்வு தரு வேன் என்பார். பிறகு நான் கவிதை பாடமாட்டேன்;"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/77&oldid=825590" இலிருந்து மீள்விக்கப்பட்டது