பக்கம்:சிதறல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 இந்தக் கற்பனையில் ஆழ்ந்துகிடந்தேன். இது அந்தக் கவிதையில் சில வரிகள். நான் எப்படியோ இங்கும் அங்கும் தாவுகிறேன். என் வாழ்க்கை என்ன சங்கிலித் தொடரா? இல்லையே, இல்லை தெளிந்த நீர் ஒட்டமா? இல்லை. பின் என்ன? அதுதான் இது சிதறல்'. ஏன் அதைச் சிதைவு என்றே கூறலாம். அந்தக் கதையில் என் அனுபவத்தை எழுதி இருந் தேன். அந்த முதலிரவை மிக அழகாக எழுதி இருந்தேன். 'தென்றல் வீசியது; நீல வானம் நட்சத்திரங்களைக் கொண்டு மீன்களை மின்ன வைத்தது. நிலா அழகாக இருந் தது. அது நெடு நிலா முற்றம் அல்ல; எங்கள் வீட்டுத் தனி அறை. சுவர்கள் எங்கள் மானத்தைக் காத்தது; அவர் ஒரு அரை மனிதராக இருந்தார். அவரை நான் முழு மனித ராக ஆக்கினேன். எங்கள் போர்வை எங்களே மறைத்தது. எங்களுக்கும் பஞ்சு மெத்தை போட்டு இருந்தார்கள். அது எங்களுக்குச் சுகம் தரவில்லை. ஏன் நாங்களே சுகத்தைப் பறிமாறிக் கொண்டோம். அவர் என்னிடத்தில்தான் சுகம் இருப்பதாகச் சொன்னர். அவரைத் தவிர வேறு இடத்தில் சுகம் இருப்பதை நான நினைத்துப் பார்க்கவில்லை." இப்படி என் வருணனே அந்த நாவலில் இடம் பெற்றது. ஒன்றே ஒன்று. அந்தக் கதாநாயகி கொஞ்சம் கர்வம் பிடித்தவளாகத் தீட்டப்பட்டாள். "சந்திர மண்டலத்துக்குப் போகலாமா' என்று அவள் கேட்டாள். ‘'வேண்டாம் தேன் நிலவு இங்கே இருக்கும் பொழுது ஏன் வேறு நிலவு' என்ருன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/78&oldid=825592" இலிருந்து மீள்விக்கப்பட்டது